தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜிகே வாசன் இன்று தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாளமுத்துநகர் புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையை தலைமையிலான ஆட்சியில்
அம்மா திட்டங்களை தடம் பிறழாமல் செயல்படுத்தி வருக்கிறார்கள். நாட்டில் முதன்மை மாநிலமாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். அதிமுக அனைத்து மக்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார்கள்.
ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் நலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த இடை தேர்தல் மிக முக்கிய தேர்தல். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனை உங்களுடைய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பதினால்
இந்த தொகுதிக்கு தேவையான வசதிகளை 100 சதவீதம் பெறபோகிறீர்கள்.
திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஆனால் அதிமுக ஆட்சியில் அனைத்து பகுதி மக்களுக்கும் திட்டங்களை கொடுக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கு திட்டங்களால் பயன்பெற்று வருகிறார்கள். திமுக கூட்டணி மக்களால் வெறுக்கும் கூட்டணி.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் தமிழக மக்களின் அனைத்து எண்ணங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் மகளீருக்கு அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
பெண் கல்வி அறிவு பெற்றால் நாட்டு முன்னேற்றம் அடையும் என்பதை கருத்தில்கொண்டு 1200 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
1.97 கோடி ஏழை எளிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கிராம நகர இணைப்பு சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தியது அதிமுக அரசு தான்.
தமிழக அரசின் இந்த மக்கள் நலத் திட்ட செயல்பாடுகளுக்கு மத்திய அரசு விருது கொடுத்துள்ளது. மேலும் வரலாற்று சிறப்புமிக்க திட்டமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூபாய் 2000 வழங்கும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறுவதற்கு தொழில் திறன் பயிற்சி திட்டம், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பேணிக் காப்பதற்கு இல்லங்கள் தோறும் கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் புதிதாக கழிப்பறை அற்ற 47 லட்சம் வீடுகளில் புதிதாக கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட ஒரு கோடி விவசாயிகளுக்கு ரூ. 2600 கோடி அளவுக்கு பயிர்காப்பீடு வழங்கப்பட்டது.
தமிழக அரசு மத்திய அரசுடன் போராடி தொடர்ந்து திட்டங்களை பெற்று தந்திருக்கிறது.
மானிய சமையல் எரிவாயு திட்டம் 27 லட்சம் பெண்கள் பலனடைந்து வருகிறார்கள்.
மத்திய அரசை பொறுத்தவரை இந்தியாவை பலமான நாடாக மட்டுமில்லாமல், பாதுக்கப்பான நாடாகவும் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நெடுஞ்சாலை திட்டம் 27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. பல துறைகளில் மத்திய மாநில அரசுகள் ஒத்த கருத்துடன் செயல்படுவதால்தான் பல நல்ல நல்ல திட்டங்களை மக்களுக்கு தர முடிகிறது. எனவே வருங்காலத்திலும் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வருவதற்கு மாநில அரசுடன் ஒத்த கருத்துள்ள வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். வருங்காலங்களில் புதிய தொழிற்சாலைகள் வர உள்ளது. தூத்துக்குடி வேகமாக முன்னேறி வரும் நகரம். இன்று மாநகராட்சி ஆன பின் சாலைகள் 1500 மீட்டர் சாலைகளாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைக்க இத்தொகுதி மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சந்திப்பின் மூலம் வட இந்தியாவில் காங்கிரஸ் தோல்வி உறுதியாகி விட்டது. மத்தியிலே மீண்டும் பிஜேபி ஆட்சியும், மாநிலத்தில் அதிமுக தொடர மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
Visual processing FTP.