ETV Bharat / state

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு - Meeting led by Tuticorin Sir Collector Simranjeet

தூத்துக்குடி: விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் எண்ணெய் நிறுவன அலுவலர்கள், கிராம பிரதிநிதிகளுக்கு இடையேயான சமாதான கூட்டம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

author img

By

Published : Feb 4, 2020, 9:34 AM IST

இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி வரை கடல் மார்க்கமாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, புதுக்கோட்டை, குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்ட விவசாய பகுதிகள் வழியாகவும் இந்த எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொட்டல்காடு உள்பட 10 சுற்றுவட்டார கிராம மக்கள் விளை நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து எரிவாயு குழாய் பதிப்பதற்காக கொண்டுவரப்பட்ட தளவாடங்களையும், லாரிகளையும் சிறைபிடித்து பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக எண்ணெய் நிறுவனம், கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரான்ஜீத் சிங் கலோன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எண்ணெய் நிறுவன அலுவலர்கள், கிராம மக்கள் இடையேயான சமாதானக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தலைமையில் நடைபெற்றது.

இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட இடங்கள், திட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கிராம மக்களுக்கு விளக்கப்பட்டன. மேலும், திட்டத்தின் நோக்கம், திட்டத்தை வரையறை செய்யப்பட்ட இடத்தின் வழியாக செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்து பேசிய கிராம மக்கள், பிரதிநிதிகள் எண்ணெய் நிறுவனங்களால் விபத்து ஏற்பட்ட சம்பவங்கள், நிகழ்வுகள், அதனுடைய பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர். மேலும் திட்டத்தை மாற்று வழியே செயல்படுத்துவதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்து பேசினர்.

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

பின்னர் ஆட்சியரின் விளக்கத்தின் பேரில் ஐ.ஓ.சி.எல் நிறுவன திட்ட விளக்கங்கள், எண்ணெய் நிறுவனத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்கள் ஆகியவற்றை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் செயல்படுத்துவது குறித்து கிராம மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக கூட்டத்துக்கு வந்திருந்த ஆஸ்கர் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விளை நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பான சமாதான கூட்டம் சார் ஆட்சியரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாத நிலையில் ஐ.ஓ.சி.எல். நிறுவன அலுவலர்களின் திட்ட செயல்பாடுகள், விளக்கங்கள் தொடர்பாக கிராம மக்களிடம் எடுத்துரைத்து மக்களின் கருத்துக்கள் அடிப்படையில் அடுத்த கூட்டத்தில் முடிவு எட்டப்படும்" என்றார்.

இதையும் படிங்க: குறைதீர் கூட்டமா? ஆனந்த மன்றமா? - அலுவலர்களின் அட்ராசிட்டியால் குமுறும் விவசாயிகள்!

Intro:விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு:
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் - கிராம பிரதிநிதிகள் இடையேயான சமாதான கூட்டம்
சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றதுBody:விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு:
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் - கிராம பிரதிநிதிகள் இடையேயான சமாதான கூட்டம்
சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி

இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்ட விவசாய பகுதிகளில் வழியாகவும் இந்த எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொட்டல்காடு உள்பட 10 சுற்றுவட்டார கிராம மக்கள் விளை நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து எரிவாயு குழாய் பதிப்பதற்காக கொண்டுவரப்பட்ட தளவாடங்களையும், லாரிகளையும் சிறைபிடித்து மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக எண்ணெய் நிறுவனம் மற்றும் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரான்ஜீத் சிங் கலோன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கிராம மக்கள் பிரதிநிதிகள் இடையேயான சமாதான கூட்டம் இன்று இரவு தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் திட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கிராம பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டன. மேலும் திட்டத்தின் நோக்கம், திட்டத்தை வரையறை செய்யப்பட்ட இடத்தின் வழியாக செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்து பேசிய கிராம மக்கள் பிரதிநிதிகள் எண்ணெய் நிறுவனங்களால் விபத்து ஏற்பட்ட சம்பவங்கள், நிகழ்வுகள், அதனுடைய பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர். மேலும் திட்டத்தை மாற்று வழியே செயல்படுத்துவதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்து பேசினர்.

முடிவில் ஆட்சியரின் விளக்கத்தின் பேரில் ஐ.ஓ.சி.எல் நிறுவன திட்ட விளக்கங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்கள் ஆகியவற்றை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் செயல்படுத்துவது குறித்து மக்கள் கிராம மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக கிராம மக்கள் பிரதிநிதிகள் ஆஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
விளை நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பான சமாதான கூட்டம் சார் ஆட்சியரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தக் எந்தவிதமான முடிவும் எட்டப்படாத நிலையில் ஐ.ஓ.சி.எல். நிறுவன அதிகாரிகளின் திட்ட செயல்பாடுகள், விளக்கங்கள் தொடர்பாக கிராம மக்களிடம் எடுத்துரைத்து மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.