நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக தலைக்கவசம் அளித்துவருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில், பர்னாந்து சிலை அருகே நூறு பேருக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைக்கவசங்களை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், "நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் சமூக அக்கறையுடன் பொதுமக்களுக்கு தலைக்கவசங்களை வழங்கியுள்ளனர். இதுபோன்ற விழிப்புணர்வு சேவைகளை மற்ற அமைப்புகளும் செய்ய முன்வர வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க:
காப்பான் படம் கொண்டாட்டம்: படம் பார்த்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ரசிகர்கள்
சூர்யா பட வெளியீட்டை முன்னிட்டு இலவச ஹெல்மெட் வழங்கி அசத்திய ரியல் காப்பான்கள்!