தூத்துக்குடி அண்ணா நகர் 7ஆவது தெருவைச் சேர்ந்தவர் இம்மானுவேல் (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு (மே 6) இம்மானுவேலை அவரது வீட்டு அருகே வெங்கடேஷ் அவரது நண்பர்களான ரஞ்சித்குமார் (எ) ரமேஷ்குமார் (19), பொன்ராஜ் (19), பரமசிவம் (20) ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இமானுவேல் இன்று (மே 7) சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்தனர்.