ETV Bharat / state

மாமன்னன் படத்தை 'தேவர் மகன்' படத்துடன் ஒப்பிட்டு பேசக்கூடாது - கடம்பூர் ராஜூ

'மாமன்னன் திரைப்படத்தில் சாதி, மோதலை உருவாக்கும் கருத்துகள் இருந்தால் படக்குழு அதனை நீக்க வேண்டும், அதற்காக தேவர் மகன் திரைப்படத்தை ஒப்பிட்டு பேசக்கூடாது' என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 28, 2023, 8:01 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட சிந்தாமணி நகர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கிளைச்செயலாளர் பாலமுருகன் பிரிந்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ''அம்மா உணவகங்களை மூடும் போக்கினை தமிழ்நாடு அரசு கை விட வேண்டும். இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றபிறகு அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மகளிருக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் திமுக மூடு விழா நடத்தி வருகிறது.

'தேவர் மகன்' திரைப்படம் வெளியானபோது பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றது. தேவர் மகனில் கருந்து வேறுபாடுகள் இருந்திருந்தால், மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவைத் தந்திருக்க மாட்டார்கள். ஜனரஞ்கமான படமாக அமைந்தது.

சாதி மோதல்களை ஊக்குவிப்பர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கதக்கது. அத்தகைய கருத்துகள் இருப்பதால் தான் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு இருந்தால் படக்குழு ஆராய்ந்து அதனை நீக்க வேண்டும். இதற்காக வெளியான பழைய படங்களை ஒப்பிட்டுப் பேசுவது தீர்வாகாது. மாமன்னன் திரைப்படத்தில் சாதி மோதலை உருவாக்கும் கருத்துகள் இருந்தால் படக்குழு அதனை நீக்க வேண்டும்.

அதிமுக இன்றைக்கு வரைக்கும் பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறது. சிறந்த பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். அதிமுக - பாஜக கூட்டணியில் முரண்பாடு ஏதுமில்லை. முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் அது குறித்து பாஜக தலைமை சொன்னால் மட்டும் தான் அது சரியான கருத்தாக இருக்கும்'' என்றார்.

முன்னதாக, மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டுவிழாவின்போது பேசிய இயக்குநர் மாரிசெல்வராஜ், '' தேவர்‌ மகன் படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் வடிவேலு கதாபாத்திரம். தேவர்‌ மகன் படத்தில் எனது அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பதே இப்படம் என்று கூறியிருந்தார். அக்கருத்து பல்வேறுதரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பை இயக்குநர் மாரிசெல்வராஜூக்குப்பெற்று தந்தது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: திரையரங்குகளில் தெறிப்புத் தருணங்கள் இருக்கும் - மாமன்னன் பார்த்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.