ETV Bharat / state

நடிகர் விஜயை பார்த்து திமுகவிற்கு பயம்: கடம்பூர் ராஜூ பரபரப்பு விமர்சனம்!

Actor vijay Leo Movie issue: கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் விஜயைப் பார்த்து திமுக பயப்படுவதாகவும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் 200 படங்கள் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Former minister Kadambur Raju said DMK is afraid of actor Vijay
விஜயை பார்த்து திமுகவிற்கு பயம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 4:12 PM IST

Updated : Oct 15, 2023, 8:06 PM IST

கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி: கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று (அக்.15) கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரத்த தானம் வழங்கியவர்களுக்கு கேடயங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறது. அரசு, நடிகர்களிடையே பாரபட்சம் பார்க்கக் கூடாது. அதிமுக ஆட்சி காலத்தில் பாரபட்சம் பார்க்காமல் 10 ஆண்டு காலம் இருந்தது. 2006 முதல் 2011 வரை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் திரைத்துறை முடங்கி போய் இருந்தது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் 2011-க்கு பின் 10 ஆண்டு காலம் வெளிப்படையான நிர்வாகத்தினால் திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது. சிறப்பு காட்சி வழங்கிய பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களை வெளியிட முடியாமல் முடங்கி உள்ளது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கம் தான். அதனுடைய உரிமையாளர் (உதயநிதி ஸ்டாலின்) அமைச்சராக உள்ளார். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின்‌ பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி அனுமதி தரவில்லை.

ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி கொடுத்தனர். பாரபட்சமாக பார்க்கப்படும் நிலை திரைத்துறைக்கு நல்லது கிடையாது‌. திரைத்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் சுதந்திரமாக செயல்பட்டது போல தற்போது செயல்பட வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் அப்படி செயல்பட மாட்டார்கள் என்பது எங்களுடைய கருத்து என்றும், எந்த நிலையிலும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்பவர்கள் திமுகவினர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

Last Updated : Oct 15, 2023, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.