சாத்தான்குளம் தந்தை, மகன் சிறை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் வேல்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய ஐந்து பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.