ETV Bharat / state

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலியால் மீனவர் பலி - நடுக்கடலில் மீனவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: சுனாமி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fishermen died
author img

By

Published : Apr 5, 2019, 1:06 PM IST

Updated : Apr 5, 2019, 2:44 PM IST

தூத்துக்குடி சுனாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவருக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் வழக்கம்போல் கடலில் மீன் பிடிப்பதற்காக சக மீனவர்களான காளியப்பன், ரமேஷ், நாகராஜ், ஆகியோருடன் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.

தூத்துக்குடி மீனவர் பலி

இந்த நிலையில் நடுக்கடலில் மீன்பிடிப்பதற்காக வலையை விரிக்கும் பணியில் கணேசன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வாந்தியுடன் நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் அவர் படகுக்குள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் கணேசன் இறந்தது குறித்து தெர்மல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் கணேசனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து கடற்படை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சுனாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் வயது 55. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உண்டு.

இன்று அதிகாலை 3 மணி அளவில் வழக்கம்போல் கடலில் மீன் பிடிப்பதற்காக சக மீனவர்கள் காளியப்பன், ரமேஷ், நாகராஜ், ஆகியோருடன் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான பைப்பர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
இந்தநிலையில் நடுக்கடலில் மீன்பிடிப்பதற்காக வலையை முடுக்கும் பணியில் கணேசன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வாந்தியுடன் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அவர் படகுக்குள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதைதொடரந்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் கணேசன் இறந்தது குறித்து தெர்மல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கணேசனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.

Visual  send  through reporter app.
Last Updated : Apr 5, 2019, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.