ETV Bharat / state

துப்பாக்கிச் சூடு: கடும்  நிபந்தனைகளுடன் அஞ்சலி நிகழ்ச்சிக்கு அனுமதி!

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து ஒராண்டு முடிவடைவதை அடுத்து, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நிபந்தனைகளுடன் நாளை நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
author img

By

Published : May 21, 2019, 10:40 PM IST

தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாளை (மே 22) ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்குமாறு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, அஞ்சலி நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது அரசுத் தரப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து இந்த அஞ்சலி நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது.

இதன்படி தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள பெல் ஹோட்டலில் நாளை காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் 11 மணிக்குள் இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும். காவல் துறையினரிடம் அளிக்கும் பெயர்பட்டியலின் படி இந்த நிகழ்ச்சியில் 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி முழுவதையும் காவல் துறையினர் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதித்து அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பிலும் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அஞ்சலி கூட்டத்தில் மேலும் 250 பேர் கலந்து கொள்ளலாம் என்று இந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் தேவாலயங்களில் அஞ்சலி கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளையொட்டி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "ஒரு வெகுஜன போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அழவும் கூட காவல் துறை அனுமதி மறுக்கும் இந்த அரசின் போக்கு வேதனை அளிக்கிறது. கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிமன்றம், நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு இந்த நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் நாங்கள் தொடர்ந்து எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம். ஆலையை திறக்கும் சூழ்நிலை வந்தால் அதை கடுமையாக எதிர்த்து போராடுவோம்" என தெரிவித்தனர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்டதுப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் வரும் மே 22ம்தேதியன்று  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்குமாறு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள்இயக்கம் சார்பில் காவல்துறையின் அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி தர மறுத்ததைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு சென்னைஉயர்நீதிமன்ற மதுரை கிளை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது அரசுத் தரப்பிலும் மற்றும்ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து இந்த அஞ்சலி நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும்இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளின்படி இந்த அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த அனுமதிஅளித்துள்ளது. இதன்படி தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள பெல் ஹோட்டலில் நாளை (மே 22ம் தேதி) காலைஒன்பது  மணிக்கு துவங்கி பகல் 11மணிக்குள் இந்த நிகழ்ச்சியை முடித்து விட வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில்காவல்துறையினரிடம் அளிக்கும் பெயர்பட்டியலின்படி 250 பேர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சிமுழுவதையும் போலீசார் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில்இந்த அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட்எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பிலும் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றகிளையில் மனுத்தாக்கல் செய்ததைத் தொடர்ந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அஞ்சலி கூட்டத்தில் மேலும் 250பேர்கலந்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் தேவாலயங்களில் அஞ்சலிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிகளையொட்டி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நீதிமன்ற அனுமதி குறித்து கருத்து தெரிவித்த  துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும்உறவினர்கள் கருத்து கூறுகையில் -ஒரு வெகுஜன போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அழவும் கூட காவல்துறை அனுமதி மறுக்கும்  இந்த அரசின் போக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. அரசுத்தரப்பிலும் ஸ்டெர்லைட்ஆதரவாளர்கள் தரப்பில் இந்த நிகழ்ச்சியை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு இந்த நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்ததிட்டமிட்டுள்ளோம். ஆனால் ஸ்டெர்லை ஆலை பிரச்சினையில் நாங்கள் தொடர்ந்து எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம். ஆலையை திறக்கும் சூழ்நிலை வந்தால் அதை கடுமையாக எதிர்த்து போராடுவோம்- இவ்வாறு கூறினார்.

பேட்டிகள்: கிருஷ்ணமூர்த்தி, சுஜித்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.