தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலை அருகே உள்ள சிஆர் காலனியை சேர்ந்த கலைவாணி என்பவருக்கு அப்பகுதியில் சொந்தமான நூற்பாலை ஒன்று இயங்கிவருகிறது.
இந்த ஆலையில் திடீரென தீ பிடித்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கழுகு மலை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து கழுகு மலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.