ETV Bharat / state

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம் - electric shock death news

ஆழ்துளை கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக பாதுகாப்பின்றி ஏற்படுத்திய மின் இணைப்பின் மீது தவறுதலாக மண்வெட்டி பட்டு மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்
author img

By

Published : Nov 30, 2020, 7:39 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த விவசாயி சமுத்திரபாண்டி (60), அதே பகுதியில் அமைந்துள்ள பால்மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பாதுகாப்பில்லாமல் போடப்பட்டிருந்த மின் ஒயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

பால்மணியின் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் மோட்டார் அறையிலிருந்து நேரடியாக ஒயர் மூலம் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஒயர், மோட்டார் அறையிலிருந்து ஆழ்த்துளை கிணறுவரையிலும் பாதுகாப்பில்லாத முறையில் தரையில் போடப்பட்டிருந்தது. அந்த ஒயரை கவனக்குறைவாக விட்டுள்ளனர்.

விவசாயின் உறவினர்கள் போராட்டம்

பால்மணியின் வயலில் சமுத்திரபாண்டி விவசாயப் பணிகளில் ஈடுபடும்போது, தண்ணீர் பாய்ச்ச வாய்க்கால் வெட்டினார். அப்போது ஒயரில் எதிர்பாராத விதமாக மண்வெட்டி பட்டுள்ளது. இதில் விவசாயி சமுத்திரபாண்டி மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, பாதுகாப்பின்றி மின்சார ஒயர்களை போட்டிருந்த வயல் உரிமையாளர் பால்மணி, மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உயிரிழந்த சமுத்திரபாண்டியின் சடலத்துடன் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த சமுத்திரபாண்டி
உயிரிழந்த சமுத்திரபாண்டி

இது குறித்து நாசரேத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் காட்வின் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சமுத்திரபாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க:மின்சாரம் பாய்ந்து மாடுகள் இறப்பு: கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.