ETV Bharat / state

எஞ்சின் கோளாறு; நடுக்காட்டில் தவிக்கவிட்ட ரயில்! - இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், எஞ்சின் பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

பாதிவழியில் பயணிகளை தவிக்கவிட்ட ரயில்
author img

By

Published : May 18, 2019, 3:18 PM IST

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. நள்ளி சத்திரம் இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் எஞ்சின் பழுதாகி காட்டுப்பகுதியில் நின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், தூத்துக்குடியில் இருந்த மைசூர் வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூர் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.

கோவில்பட்டி ரயில்நிலையம்

இதே போல் நாகர்கோவில் முதல் சென்னை தாம்பரம் வரை செல்லும் அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலும், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நெல்லையில் இருந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு, காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் திருச்சி இன்டர்சிட்டி செல்லும் ரயில் பெட்டிகளில் இணைக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. பின்னர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்களும் புறப்பட்டு சென்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்து நின்றது. பின்னர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு இந்த ரயில் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் கோவில்பட்டியில் இருந்து நள்ளி சத்திரம் இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் எஞ்சின் பழுதாகி காட்டுபகுதியில் நின்றது. இதுகுறித்து தகவல் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், தூத்துக்குடியில் இருந்த மைசூர் வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூர் ரயில் நிலையத்திலும், நாகர்கோவில் முதல் சென்னை தாம்பரம் வரை                      செல்லும் அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலும்

சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நெல்லையில் இருந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு, காட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் திருச்சி இன்டர்சிட்டி செல்லும் ரயில் பெட்டிகளில் இணைக்கப்பட்டது. இதையடுத்து                             இந்த ரயில் இங்கிருந்து                        இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதையடுத்து                      ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்களும் புறப்பட்டு சென்றது. இதனால் கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சிமணியாச்சி, கடம்பூர் ரயில்நிலையங்களில் காத்திருந்த பயணிகள் தங்களது பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் செல்ல முடியாமல் 3 மணி நேரம் மிகவும் சிரமப்பட்டனர்.

பேட்டி-மல்லிகா
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.