கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 திருநங்கைகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மத்தியபாகம் காவல் நிலையம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசு ஊரடங்கில் தளர்வினை அறிவித்த போதிலும் மக்கள் சுய கட்டுப்பாடுடன் சமூக விலகலை கடைபிடித்தால்தான் கரோனா பரவலைக் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். அனைவரும் அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து அவரிடம் பட்டப் படிப்பு பயின்று வேலையின்றி தவித்து வரும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால் உதவிகரமாக இருக்கும் என திருநங்கைகள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த அவர், படித்த திருநங்கைகள் மட்டுமல்லாமல் படிக்காத திருநங்கைகளின் சுயவிவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை புகைப்படங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்தால். அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: திருநங்கைகளுக்கான தேசியக் குழு உறுப்பினர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - தமிழச்சி எம்.பி!