தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சுமார் 6 அடி அகலமுள்ள வாறுகால் அமைக்கப்பட்டு வருகிறது.
வாறுகால் அமைக்கப்படும் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் இடையூறாக உள்ளதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் கோயிலை அகற்ற முடிவு செய்து இன்று (நவ.18) காலை ஜே.சி.பி இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனர்.
இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன், அக்கட்சித் தொடர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
கோயில் அகற்றப்படாது என உறுதி அளித்தப் பின்னரே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தார். இதனை அடுத்து, தொலைப்பேசி வாயிலாக எம்.எல்.ஏகீதா ஜீவனிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், வாறுகால் அமைக்கப்படும் போது ஆலயத்தை அகற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: நடிகையின் வீட்டில் செல்போன் திருட முயன்றவர் கைது