தூத்துக்குடி கின்ஸ் இலவச பயிற்சி அகாடமியில், பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்ற 124 மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக் கேடயம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை அறிவியல் நகரத்தின் தலைவர் சகாயம் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்கள், வீட்டிலலிருந்தே தங்களைத் தயார் செய்யும் வகையில் www.khinsacademy.com என்ற இலவச இணையதள பக்கத்தை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ள விவகாரம், வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கானோர் கடுமையாகப் படித்து தேர்வெழுதி வேலைக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் கனவை இந்த முறைகேடு பாதித்துள்ளது.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று முறைகேடு நடக்காமல் இருக்க, தற்போதுள்ள அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.
இதையும் படியுங்கள்: 'மினி சாதனையாளன் டெனி' - அடுத்த இலக்கு கின்னஸ்..
!