ETV Bharat / state

ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு - திமுக நடத்தும் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன.

cricket
cricket
author img

By

Published : Mar 14, 2020, 1:28 PM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் விளையாட்டுப் போட்டிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர்களிடையே மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி தனியார் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட தொகுதிகளுக்குள்பட்ட 32 அணியினர் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி

இதில் வெற்றி பெறும் அணியினருக்கு நாளை (மார்ச் 15) மாலை நடைபெறும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழும், கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். மாவட்ட அளவில் வெற்றிபெற்று முதலிடம் பிடிக்கும் கிரிக்கெட் அணியினருக்கு 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பிடிக்கும் அணியினருக்கு 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணியினருக்கு ஐந்தாயிரம் ரூபாயும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு 2,500 ரூபாயும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் கிரிக்கெட் அணியினர் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவர். இதைத் தொடர்ந்து மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறும் கிரிக்கெட் அணியினர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது" தூத்துக்குடி திரும்பிய பயணி வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.