திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று இரவு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு ஆரத்தி எடுத்ததற்கு, தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் வழங்கியதாக அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை உள்ளிட்ட 4 பேர் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பொய்யான புகார்.
கடந்த 27.2.2019 அன்று நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை ஆதாரமாக வைத்துகொண்டு அதை தற்போது தேர்தல் பரப்புரையின்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆகவே, பொய்யான ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்" என்றார்.