ETV Bharat / state

போர்க்கால அடிப்படையில் மழை நீர் அகற்றும் பணிகள் - மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Dec 5, 2020, 4:18 PM IST

தூத்துக்குடி: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற 143 மின் மோட்டார்கள் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

District Collector
District Collector

தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கி பணியிடங்களுக்கான தேர்வு புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள 30 காலி உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இப்பணியிடத்திற்கு 495 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். 298 நபர்கள் தேர்வு எழுத வருகை தந்துள்ளனர்.

நாளை கூட்டுறவு சங்கங்களின் உதவியாளர் பணியிடங்களுக்கான 66 காலியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் பதிவாளர் மேற்பார்வையில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு (டிசம்பர் 4) மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இங்கு ஏற்கனவே மாநகராட்சியினர் டீசல் பம்புகள் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் 143 பம்புகள் மூலம் நீர் வெளியேற்றி வருகிறது. கூடுதலாக மதுரை, திருச்சி மாநகராட்சியில் இருந்து தலா 10 எண்ணிக்கையில் 40 எச்பி திறன் கொண்ட மோட்டார்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மோட்டார் மூலம் நீர் வெளியேற்ற முடியாத பகுதியில் டேங்கர் லாரிகள் மூலம் நீர் வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியின் 4 லாரிகள், திருச்சி மாநகராட்சி மூலம் 4 லாரிகளும் வாடகை அடிப்படையில் 4 லாரிகள் என மொத்தம் 12 டேங்கர் லாரிகளை கொண்டு நீர் அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதையும் மின் பணியாளர்கள் சரிசெய்து வருகின்றனர். நீர் வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களும் தொடர்ந்து இயங்கி வருகிறது.

தூத்துக்குடி நகராட்சி தாழ்வான பகுதியில் உள்ள 20 குடும்பங்களை முகாமில் தங்க வைக்கபட்டுள்ளது. அதேபோல் காயல்பட்டணம் பகுதியிலும் தாழ்வான பகுதியில் உள்ள 2 குடும்பங்கள் அழைத்து வரப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.