ETV Bharat / state

இயக்குநர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் திடீர் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை! - Mari selvarai AD death

Mari selvarai AD death: இயக்குநர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் மாரிமுத்து மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Director Mari Selvaraj's assistant director Marimuthu died
இயக்குநர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் மாரி முத்து மரணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 12:11 PM IST

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் மாரிமுத்து (30). இவருக்கு ஷீபா என்ற மனைவியும், சாமுவேல் என்ற 5 வயது மகனும் உள்ளனர். இவர் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ணன்' படத்தில் நடித்து, மாரிமுத்து அறிமுகம் ஆனார். பின், 'மாமன்னன்' மற்றும் திரைக்கு வரவுள்ள மாரி செல்வராஜின் 'வாழை' படம் உள்ளிட்ட படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், இவர் அடுத்ததாக தனியாக கதை எழுதி படம் எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மாரிமுத்துவிற்கு அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின், மருத்துவமனையில் லேசான நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து நேற்று (நவ.27) உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னராஜ், அவரது மரணத்திற்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: நடிகர் பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் மார்க் ஆண்டனி பட இயக்குநர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.