தூத்துக்குடியில் கரோனா தொற்றின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்பாகம் காவல் நிலையத்தில் காவல் நிலைய எழுத்தர் உள்பட 3 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்ற காவலர்கள் மத்தியிலும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்பாகம் காவல் நிலையமானது, மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஒரே நாளில் 195 பேருக்குக் கரோனா தொற்று உறுதி!