லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக தமிழ்நாடு அரசு, செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியில் அமர்த்தியது.
தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த இவர்களை, கடந்த அக்டோபர் 31ஆம் தேதியுடன் பணிநீக்கம் செய்துவிட்டதாக வாய்மொழி உத்தரவினை அரசு போட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இந்தப்பணி நிரந்தரமில்லை என்றாலும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு முழுவதிலுமுள்ள மருத்துவ காலி பணியிடங்களில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க குவிந்தததால் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ’உறுதியளித்தபடி பணி நிரந்தரம் செய்யவில்லை’ - செவிலியர்கள் போராட்டம்