ETV Bharat / state

தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை இருந்ததே இல்லை: அன்புமணி ராமதாஸ் வேதனை

Anbumani Ramadoss: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 9:30 PM IST

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

தூத்துக்குடி: திருநெல்வேலியில் இம்மானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக்.22) தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வந்தார்.

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “சமீப காலத்தில் கடற்கொள்ளையர்கள் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. இலங்கை கடற்பகுதியினர் நம்முடைய மீனவர்களை அச்சுறுத்தி, மீன்களை கொள்ளையடித்து செல்கின்றனர். இதனை இலங்கை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் உள்ள 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தார்கள். நேற்று முன்தினம் நாகையில் உள்ள 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சமீப காலத்தில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் டாலர், அதாவது 12 ஆயிரம் கோடி ரூபாய் உதவி செய்து இருக்கிறது.

இந்த உதவி, நிபந்தனை இல்லாத உதவி. இவ்வளவு உதவி செய்தும் இன்னும் நம்முடைய மீனவர்களை கைது செய்து இருக்கின்றனர். இதனை தமிழக அரசு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

கனிம வள கொள்ளை: சமீப காலமாக தென் மாவட்டங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான டாரஸ் லாரிகளில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்து கடத்தப்பட்டு வருகிறது.

பின்னணியில், அரசியல் புள்ளிகள் இருப்பதாக செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்த கனிம வளங்களை மேலோட்டமாக பார்க்க கூடாது. இது சுற்றுச்சூழலுக்கு மிகுந்த ஆபத்து. அதுமட்டுமின்றி, சக்தி வாய்ந்த வெடிகளை வைத்து வெடித்து, அந்த வளங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

பட்டாசு ஆலைகள்: பட்டாசு ஆலைகள் இன்னும் பாதுகாப்பாக நடத்த வேண்டும். சமீபத்தில் சிவகாசி மற்றும் கிருஷ்ணகிரியில் பட்டாசு விபத்து நடந்தது. இதையெல்லாம் முறையாக பாதுகாக்க வேண்டும். மேலும், இறந்தவர்களுக்கு தமிழக அரசு 25 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும்.

சாதி வாரி கணக்கெடுப்பு: தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின், கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகின்ற ஒரு சூழல் உள்ளது. கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதை வெளியிட்டு இருக்கிறார்கள். 45 நாட்கள், 500 கோடி ரூபாய் செலவில் 13 கோடி மக்களுக்கு கணக்கெடுப்பு நடத்தினார்கள்.

சமீபத்தில் ஆந்திர அரசு நவம்பர் 15-ல் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்து இருக்கிறது. ஒரிசா அரசு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடத்த இருக்கிறது. ராஜஸ்தான் அரசு மீண்டும் வெற்றி பெற்றால் நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான், மத்திய அரசு நடத்த வேண்டும். இது எங்களுடைய வேலை கிடையாது என்று சமூக நீதியை பேசுகின்ற திமுக அரசு, அதன் கடமைகளை தட்டி கழித்துக்கொண்டு இருக்கிறது. பெரியார் பிறந்த மண் இது. இந்த மண்ணில், இந்தியாவில் முதன்முறையாக நாம் தான் சாதிவாரி கணக்கெடுப்பு செய்திருக்க வேண்டும்.

பெரியார் பெயரை பயன்படுத்திகிறீர்கள், ஆனால் பெரியார் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். 13 கோடி மக்கள் தொகை உள்ள பீகார் மாநிலத்தில், 45 நாளில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 7.45 கோடி மக்கள் தான். கிட்டத்தட்ட 25 நாட்களில் முடிக்கலாம். இந்தியாவில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இவ்வளவு விழுக்காடு, வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

திமுக நீட் தேர்வு கையெழுத்து இயக்கம்: வெற்றி பெற்றவுடன் ஒரு வாரத்தில் நீட்டை ரத்து செய்வோம் என்றனர். இன்று முட்டை எல்லாம் காண்பிக்கிறார்கள். திமுகவினர் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு இந்தியாவிற்கும் தேவை இல்லை, தமிழகத்திற்கும் தேவை இல்லை.

சட்டம் ஒழுங்கு: கஞ்சாவை கட்டுப்படுத்தினால் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும். எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்றுக்கொண்டு இருக்கின்றனர். இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை வந்ததே கிடையாது. கடந்த 15 ஆண்டு காலமாகவே போதைப்பொருள் விற்பனை அதிகமாகி வருகிறது.

தற்போது உச்சத்தில் உள்ளது. பள்ளிக்கூடம், கல்லூரிகளில் கஞ்சா இருக்கிறது. நடக்கின்ற கொலை குற்றங்கள் பல மது மற்றும் கஞ்சாவினால் தான் நிகழ்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாத மாதம் கடுமையான கட்டளைகள் காவல்துறைக்கு கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் ஞானோதயம் வந்தது எப்படி? - திமுக எம்பி ஆ.ராசா விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.