ETV Bharat / state

கோவில்பட்டி தீக்குச்சி ஆலை விபத்து: ஒருவர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு - Chief Minister who gave relief of 3 lakhs

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து எற்பட்டு ஒரு பெண் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கோவில்பட்டி தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

author img

By

Published : Jul 1, 2023, 9:02 AM IST

கோவில்பட்டி தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டியில் அப்பநேரியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான மருதி இண்டஸ்டிரிஸ் என்ற ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், மரம் அறுத்து தீப்பெட்டி தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களான குச்சி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில், கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் (75) என்பவர் தயாரிக்கப்படும் குச்சியை காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூன் 30) ஆலை இயங்காத நிலையில் மாரியம்மாள் மற்றும் மேலும் அவருடன் பணிபுரியும் சித்திரம்பட்டியைச் சேர்ந்த கனகராஜேஸ்வரி ஆகிய இருவரும் குச்சியை காய வைக்கும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மதிய நேரம் என்பதால் இருவரும் இயந்திரங்கள் இருக்கும் பகுதியில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக திடீரென இயந்திரம் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. மேலும், தயாரிக்கப்பட்டிருந்த குச்சி பகுதியிலும் தீப்பிடித்து பற்றி எரியத் தொடங்கி உள்ளது.

இதனைப் பார்த்த மாரியம்மாள், கனகலெட்சுமி இருவரும் அலறி அடித்து ஓடத் தொடங்கியுள்ளனர். ஆனால், மாரியம்மாள் அங்குள்ள சிறிய தடுப்பில் மோதி தீ எரிந்து கொண்டு இருந்த குச்சி பகுதியில் விழுந்ததால், மாரியம்மாள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவத்தை குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினரும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினர் தீயை பரவ விடமால் தடுத்தனர். காயம் அடைந்த கனகலெட்சுமி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மின் கசிவு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, தீ விபத்தில் உயிர்யிழந்த மாரியம்மாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சித்திரம்பட்டியில் இயங்கி வரும் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக எற்பட்ட தீ விபத்தில் உயிரரிழந்த மாரியம்மாள் மற்றும் விபத்தில் காயம் அடைந்த கனகராஜேஸ்வரி இருவரின் நிலையை கண்டு துயரம் அடைந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

3 லட்சம் நிவாரணம் அளித்த முதலமைச்சர்
3 லட்சம் நிவாரணம் அளித்த முதலமைச்சர்

மேலும், விபத்தில் உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் மற்றும் தீ விபத்தில் காயமடைந்த கனகராஜேஸ்வரிக்கு 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரன நிதியில் இருந்து வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்

இதையும் படிங்க: கரூரில் விதிமுறைகளை மீறிய கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.