ETV Bharat / state

திமுக எம்எல்ஏக்கள் ஒருவர் கூட தம்மை சந்தித்தது இல்லை - முதலமைச்சர்

தூத்துக்குடி: தற்போது உள்ள 88 திமுக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட தங்கள் தொகுதி பிரச்னைக்காக தன்னை சந்தித்து மனு அளித்ததில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

cm
author img

By

Published : May 7, 2019, 11:25 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மினால் எம்.எம்.ஏ.மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓட்டப்பிடாரம், புத்தியம்புத்தூர், தருவைகுளம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் முதலமைச்சரை சந்தித்து மக்கள் பிரச்னைக்கு மனு அளிக்கபோவதில்லை. இப்போது உள்ள 88 திமுக எம்எல்ஏக்களில் ஒருவர்கூட என்னை சந்தித்து மனு அளிக்கவில்லை. எனவே ஆளும்கட்சி வெற்றி பெற்றால் உங்களுக்கான பிரச்சனைகள் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டப்பிடாரத்தில் தண்ணீர் பிரச்சனையை போக்க தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் முடிவு பெற்று திறக்க காத்திருக்கிறது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி தரம் உயர்த்தி பேரூராட்சியாக அறிவிக்கப்படும். எதிர்கட்சியாக இருக்கும்போதே திமுகவினர் அராஜகம் செய்து வருகிறார்கள். இதில் ஸ்டாலின் முதலமைச்சரானால் நாடு தாங்குமா? ஏழைகளுக்கு திட்டங்களை தடுத்து நிறுத்தும் கட்சியாக திமுக உள்ளது.

எதை சொன்னாலும் மக்கள் கேட்டுகொள்வார்கள் என நினைத்து 25 வருடம் கழித்து ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என துரைமுருகன் கூறியுள்ளார். இந்தியாவிலேயே ஒரு தொகுதியில் மக்களவைத் தேர்தல் பணம் வினியோகத்தால் நிறுத்தப்பட்டது என்றால் அந்த பெருமை திமுகவையே சாரும். மீனவ மக்களுக்கு அதிமுக அரசு என்றுமே உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக மினால் எம்.எம். ஏ. மோகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓட்டாப்பிடறம் தொகுதிகுட்பட்ட ஒட்டப்பிடாரம், புத்தியம்புத்தூர், தருவைகுளம், தாளமுத்து நகர், முத்தையாபுரம், முத்தம்மாள் காலணி,  புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,

எதிரணியை சேர்ந்த திமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் முதல்வரை சந்தித்து மக்கள் பிரச்சனைக்கு மனு அளிக்கபோவதில்லை. இப்போது உள்ள 88 பேரில் ஒருவர்கூட என்னை சந்தித்து மனு அளிக்கவில்லை. ஆளும்கட்சி வெற்றி பெற்றால் உங்களுக்கான பிரச்சனைகள் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கபடும்.

துரோகிகளோடு ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களால் தான் இந்த தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்டவேண்டும்.
நன்றி மறந்து சேராதவர்களோடு சேர்ந்து இன்றைய தேர்தலை சந்திக்க வைத்துவிட்டார் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.க்காக பிரச்சாரம் செய்யவரும் டிடிவி 2016 ஆம் ஆண்டு கட்சியிலேயே கிடையாது.
ஓட்டபிடாரத்தில் தண்ணீர் பிரச்சனையை போக்க தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் முடிவு பெற்று திறக்க காத்திருக்கிறது.
ஓட்டபிடாரம் ஊராட்சி தரம் உயர்த்தி பேரூராட்சியாக அறிவிக்கபடும்.
ஸ்டாலின் எங்கு சென்று பிரச்சாரம் செய்தாலும் எங்களை பற்றி குறை சொல்லிதான் பிரச்சாரம் செய்கிறார். அவரால் ஆவர்களது ஆட்சி காலத்தில் செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கமுடியாது.
எனில் அவர்கள் ஆட்சி காலத்தில் எந்த சாதனை திட்டத்தையும் செய்யவில்லை.
பெரம்பலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குறித்து தவறான குற்றச்சாட்டுகளை சொல்லிவருகிறார் ஸ்டாலின்.

கடந்த 21 ம் தேதி பெரம்பலூர் எம்.எல்.ஏ குறித்து வழக்கறிஞர் அருள் புகார் அளித்து விசாரணை செய்ய சொன்னார். ஆனால் அந்த புகாரில் அடிப்படை ஆதாரமும் இல்லை என விசாரணை செய்தபோது தெரியவந்தது. இதனால் வழக்கறிஞர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்பட்டுள்ளது.
இதெல்லாம் தெரியாமல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வழக்கை தொடர்பு படுத்தி பேசிய ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஸ்டாலின் மீது பெரம்பலூர் எம்.எல்.ஏ  அவதூறு வழக்கு பதிவு செய்வார்.
எதிர்கட்சியாக இருக்கும்போதே திமுகவினர் அராஜகம் செய்துவருகிறார்கள். இதில் ஸ்டாலின் முதல்வராகவந்தால் நாடு தாங்குமா?.

சட்டம் ஒழுங்கு பேனிபாதுகாப்பதில் இந்தியாவில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. அதிலும் கோவை ஆர்.எஸ்.புரம் கவள் நிலையம் தான் முதலிடத்தில் உள்ளது.
சாதிக் பாட்சா மர்மம் மரணம் குறித்து பதியபட்ட வழக்கை மீண்டும் தூசிதட்டி விசாரணை நடத்தபடும். உண்மை குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம்.

அனைத்து தொழிலாளிகளுக்கும் 2000 வழங்கும் திட்டத்தை துவங்கிவைத்த பின்னர் திமுகவினர் வழக்கு தொடர்ந்து தடுத்து நிறுத்தி விட்டனர். எனவே தேர்தலுக்கு பின்னர் அனைத்து தொழிலாளர்களுக்கும் 2000 வழங்கப்படும்.
ஏழைகளுக்கு திட்டங்களை தடுத்து நிறுத்தும் கட்சி திமுக. இவர்களா உங்களுக்கு நன்மையை செய்வார்கள்.
ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்வதே எங்களது கடமை.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்க்கே அதிமுக ஆட்சியில் முன்னுரிமை வழங்கப்படும்.
கேபிள் கட்டணம் உயர்த்த காரணம் திமுகவின் குடும்பத்தினர்தான்.

திமுக கொள்ளையடிக்கத்தான் கட்சி நடத்துகிறது. திமுக குடும்ப கட்சி கார்ப்ரேட் கட்சி. அந்த கட்சி நாட்டை ஆள வாய்ப்பு வழங்ககூடாது.
அவர்கள் தேர்தலுக்காக தான் நாடகம் நடத்துகின்றனர்.
தற்போது உதயநிதி வந்துவிட்டார்.
இந்த நாட்டை ஆள் கூடிய தகுதி திடணுகி தான் உண்டு. அப்போது தான் நாடு வளரும்.
கட்சியை உடைக்க பார்த்தார் முடியவில்லை. இப்போது ஆட்சியை கலைக்க முயல்கிறார்.
25 வருடம் கழித்து ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என துரைமுருகன் கூறியுள்ளார்.

எதை சொன்னாலும் மக்கள் கேட்டுகொள்வார்கள் என நினைத்து பேசுகின்றனர்.
வேலூரில் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சித்தனர். அதனால் தான் அங்கு தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல் நின்றது. இந்தியாவிலேயே ஒரு  பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணம் வினியோகத்தால் நிறுத்தப்பட்டது என்றால் அந்த பெருமை திமுகவையே சாரும்.
மீனவ மக்களுக்கு அதிமுக அரசு என்றுமே உறுதுணையாக இருக்கும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.