தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிசிஐடியினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் சிபிசிஐடி ஐஜி சங்கர் இன்று(ஜூலை 9) தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தந்தை-மகன் வழக்கு தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணையின் முடிவில், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்களா? என்பது தெரியவரும்.
வழக்கில் முக்கிய தடயங்கள், ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வு செய்துவருகிறோம். அதன்படி சாத்தான்குளம் சிசிடிவி காட்சிகளை மாஜிஸ்திரேட் (நீதித்துறை நடுவர்) கைப்பற்றியுள்ளார்.
தற்போது அவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மூலமாக அது தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். சிபிஐ அலுவலர்கள் தங்களின் விசாரணையை தொடங்கினால், சிபிசிஐடி வழக்கை விசாரிக்காது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: சிகிச்சையில் இருக்கும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை!