ETV Bharat / state

'சுய ஊரடங்கை கடைப்பிடித்தால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும்!'

author img

By

Published : May 11, 2020, 12:48 PM IST

தூத்துக்குடி: தற்போது அரசு ஊரடங்கை தளர்வு செய்தாலும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்தால் மட்டுமே இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ  அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு  தூத்துக்குடி லேட்டஸ்ட் செய்திகள்  அமைச்சர் கடம்பூர் ராஜூ லேட்டஸ்ட்  Minister Kadampur Raju  Minister Kadampur Raju Press Meet  Thoothukudi Latest News
Minister Kadampur Raju

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூரில் உள்ள தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

இதில் பூப்பந்தல் அமைப்பு, சுமைதூக்கும், தையல், மண்பாண்டம், கூடை பின்னுதல், இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளர்கள் என ஆயிரத்து 652 பேருக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஐந்தாயிரத்து 338 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 27 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு ஒருவர் இறந்த நிலையில் 26 பேர் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 14 நாள்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சென்னை உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களின் காரணமாக புதியதாக மூன்று பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தற்போது அரசு ஊரடங்கை தளர்வு செய்தாலும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். தொற்று இன்னும் முழுமையாகக் குறையவில்லை. சென்னையில் நோய்த்தொற்று அதிகப்படியாக உள்ளது" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதானமாக 15 சோதனைச்சாவடிகள், கிராமப்புற பகுதிகளில் 45 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

இந்தச் சோதனைச்சாவடிகளில் வெளிமாவட்ட, வெளிமாநிலத்தவர்களைக் கண்காணித்து அவர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் நமது மாவட்டத்தை இந்தத் தொற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'விரைவில் கரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறும்' - அமைச்சர் கடம்பூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.