ETV Bharat / state

காதலியை மனைவியாக்கிய அண்ணன் அவர் பிள்ளைகளை கொலை செய்த தம்பி

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த அண்ணணின் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vilathikulam
vilathikulam
author img

By

Published : Mar 24, 2020, 10:32 AM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன் பொம்மையாபுரம் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் ஜோதிமுத்து, ரத்தினராஜ். இருவரும் லாரி டிரைவர்கள். ஜோதிமுத்துவிற்கு இரண்டு மனைவிகள். உஷாராணி, மகாலெட்சுமி என்ற இரு சகோதிரிகளையும் ஜோதிமுத்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சீமான் அல்போன்ஸ் என்ற மைக்கில் (14), எட்வின் ஜோசப் (9) ஆகிய 2 மகன்களும், 10 வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணும் உள்ளனர்.

குழந்தைகள் படிப்பிற்காக விளாத்திகுளத்தில் வசித்து வரும் ஜோதிமுத்து, அயன் பொம்மையாபுரத்தில் சொந்த வீடு ஒன்று கட்டி வருகிறார். தற்போது, குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை என்பதால் குடும்பத்துடன் அயன் பொம்மையாபுரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலையில் விளையாட சென்ற இருமகன்களும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் ஜோதிமுத்து, அவரது உறவினர்கள் ஊர் முழுக்க தேடியுள்ளனர். சிறுவர்கள் இருவரும் காணாததால், அச்சமடைந்த ஜோதிமுத்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஜோதிமுத்துவின் சகோதரர் ரத்தினராஜ் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் பேசியதை ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் ரத்தினராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மது போதையில் இருந்ததால் காவல்துறையிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனிடையே பொம்மையாபுரம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் செருப்பு ஒன்று கிடப்பதாக கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் கடலில் முத்துகுளிப்பவர்களை வைத்து, இருவரது உடலையும் மீட்டனர். சிறுவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ரத்தினராஜிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

காவல்துறை விசாரணையில் வெளிவந்த தகவல்

"ரத்தினராஜுக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பு உஷாராணியின் தங்கையான மகாலெட்சுமியுடன் தொடர்பு இருந்துள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு ஜோதிமுத்து எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி குடும்பத்தினருடன் சேர்ந்து ரத்தினராஜுக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.

அண்ணன் மீதான கோபத்திற்கு காரணம்

மைக்கில்
மைக்கில்
கொலை செய்யப்பட்ட எட்வின் ஜோசப்
கொலை செய்யப்பட்ட எட்வின் ஜோசப்

திருமணமாகி சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த ரத்தினராஜ், மீண்டும் மகாலெட்சுமியுடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். இந்த சூழ்நிலையில் தான் தம்பியின் காதலியும் தனது முதல் மனைவியின் தங்கையுமான மகாலெட்சுமியை 2ஆவதாக திருமணம் செய்துள்ளார் ஜோதிமுத்து. இது ரத்தினராஜுக்கு ஆத்திரதை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வப்போது மது அருந்திவிட்டு ரத்தினராஜ் ஜோதிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தன் காதலை கெடுத்து, தனது காதலியை திருமணம் செய்த அண்ணன் குடும்பத்தை பழிவாங்கும் விதமாக அவரின் இரு பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் ரத்தினராஜ்."

தன் காதலியை திருமணம் செய்த அண்ணனை பழிவாங்க அவரது இரு மகன்களை தம்பி கொலை செய்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இத்தாலியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு - ஆனாலும் ஒரு நற்செய்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.