ETV Bharat / state

ஊராட்சி செயலாளரிடம் ரூ.100 கோடி சொத்து - பாஜக விவசாய அணியினர் பரபரப்பு புகார்

கோவில்பட்டி வரதம்பட்டி ஊராட்சிமன்றச் செயலாளரிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாகவும் அவர் மீது ஊழல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக விவசாய அணியினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த உத்தண்டராமன்
செய்தியாளர்களைச் சந்தித்த உத்தண்டராமன்
author img

By

Published : Feb 1, 2022, 8:45 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி பாஜக விவசாய அணி வடக்கு மாவட்ட துணைத் தலைவராக உத்தண்டராமன் செயல்பட்டு வருகிறார். இவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரதம்பட்டி ஊராட்சி மன்றத்தின் செயலாளராக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் என்பவர் பணியமர்த்தப்பட்டார்.

இவர் வரதம்பட்டி ஊராட்சியிலேயே 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி பல்வேறு ஊழல், மோசடிகளை செய்துள்ளார். பணியில் சேரும்போது வறுமைக்கோட்டிற்கு கீழிருந்த அவர், தற்போது பன்மடங்கு சொத்துக்களோடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அவர் ஊராட்சிமன்றச் செயலாளராக பணியில் இருக்கும்போதே அவருடைய மனைவி சாந்தி என்பவரின் பெயரில் அரசு ஒப்பந்தம் பதிவு செய்து அரசு நிதிகளை சட்டத்திற்கு விரோதமாகப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார். இதற்கு ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையாளர், பொறியாளர், தனி அலுவலர் ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.

இவர் மீது எழுந்த மோசடிப் புகார்கள் குறித்து வரதம்பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது தங்கராஜின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். ஆனால், இவர் மீது கொடுக்கப்பட்ட எந்த ஊழல் புகாருக்கும் இதுவரை அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செய்தியாளர்களைச் சந்தித்த உத்தண்டராமன்

இதற்குக் காரணம் இவரோடு சேர்ந்த ஆணையாளர், பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களும் கூட்டாக அரசு நிதியை மோசடி செய்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

எனவே, அரசு நிதிகளை ஊழல் செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் சட்ட ரீதியாக இதனை சந்திப்போம்” என்றார்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படை அதிரடி; ரூ.53 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.