ETV Bharat / state

ஓட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு - இலவச ஊட்டச்சத்து உணவு

தூத்துக்குடி: மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தை வலியுறுத்தி ஓட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு அளிக்கப்படுகிறது.

Boshan abhiyan hotel
author img

By

Published : Sep 24, 2019, 10:52 PM IST

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை நோய்தொற்றில் இருந்து பேணி பாதுகாக்கின்ற வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது. இன்றைய உலகத்தில் விரைவு உணவுகளையே மக்கள் விரும்பி உண்ணும் நேரத்தில் அதிலிருந்து அவர்களை மாற்றும் வகையில் பாரம்பரியமான ஊட்டசத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும் என்பதை வலியுறுத்தி மத்தியஅரசு குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி மையங்களில் கர்ப்பணி பெண்களுக்கு இது போன்ற ஊட்டசத்து உணவுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் கர்ப்ப காலமும், குழந்தை பிறந்தது முதல் 1000 நாட்கள் வரை தாய், சேய் என இருவரின் வளர்ச்சியும் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் தேவர்புரம் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி மதியம், மாலை என இரு வேளைகளிலும் உணவுடன் பால் கஞ்சி, மூலிகை கஞ்சி, முருங்கை சூப், வாழைத்தண்டு சூப், கம்பு கஞ்சி, கேப்பை கஞ்சி இப்படி ஏதேனும் ஒரு சிறப்பு ஊட்டச்சத்து உணவை இலவசமாக வழங்குகின்றனர்.

இலவச ஊட்டச்சத்து உணவு வழங்கும் உணவகம்

மாலை நேரத்தில் ஊட்டசத்து அளிக்கக்கூடிய கொண்டைகடலை, பாசி பயறு, சுண்டல், அவித்த நிலக்கடலை, தட்டைபயிறு சுண்டல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இலவசமாக பரிமாறப்படுகிறது. இதற்காக உணவகத்தின் முகப்பில் விளம்பர பலகைகள், பந்தல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உணவக உரிமையாளர் செந்தில் ஆறுமுகம் கூறுகையில், ”பாரம்பரிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை மக்கள் உண்ணவேண்டும். ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும் என்பதற்காக அரசு செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக உணவகத்துக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவுடன் கஞ்சி, பயிறு போன்றவற்றை இலவசமாக தருகிறோம் என்றார்.

மேலும், இந்த சேவையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு வழங்க முடிவுசெய்துள்ளோம். ஆகவே, வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை அன்றாட உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

Intro:தூத்துக்குடியில் ஓட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு - மத்திய அரசின் திட்டத்தை வலியுறுத்தி சேவை - சிறப்பு செய்திBody:
தூத்துக்குடி

கர்ப்பினி பெண்கள் மற்றும் குழந்தைகளை நோய்தொற்றில் இருந்து பேணி பாதுகாக்கின்ற வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

இத்திட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பிறந்தது முதல் 1000 நாள்கள் குழந்தையின் வளர்ச்சி முக்கியம் என்ற அடிப்படையில் தாய்,சேய் என இருவரின் வளர்ச்சியும் கண்காணிக்கப்படுகிறது.
இன்றைய உலகத்தில் விரைவு உணவுகளையே மக்கள் விரும்பி உண்ணும் நேரத்தில் அதிலிருந்து அவர்களை மாற்றும் வகையில் பாரம்பரியமான ஊட்டசத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசு குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்களில் கர்ப்பணி பெண்களுக்கு இது போன்ற ஊட்டசத்து உணவுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு செப்டம்பர் மாதம் முழுவதும் போஷான் அபியான் திட்டம் குறித்து பள்ளி குழந்தைகள், பெண்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினிமாரத்தான், கையெழுத்து இயக்கம், சிறப்பு கிராம சபைக் கூட்டம், கலைநிகழ்ச்சிகள், பிரசாரம், கோலப்போட்டி, கதை, கட்டுரை, ஓவியப்போட்டி என பல்வேறு வடிவங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது ஒவ்வொரு வட்டாரம், ஊரக பகுதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம் என அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுகின்றது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் தேவர்புரம் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி மதியம், மாலை என இரு வேளைகளிலும் பரிமாறப்படும் உணவுடன் பால் கஞ்சி, மூலிகை கஞ்சி, முருங்கை சூப், வாழைத்தண்டு சூப், கம்பு கஞ்சி, கேப்பை கஞ்சி இப்படி ஏதேனும் ஒரு சிறப்பு ஊட்டச்சத்து உணவை இலவசமாக வழங்குகின்றனர்.

மாலை நேரத்தில் ஊட்டசத்து அளிக்கக்கூடிய கொண்டைகடலை, பாசி பயறு, காணம், சுண்டல், அவித்த நிலக்கடலை, தட்டைபயிறு சுண்டல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இலவசமாக பரிமாறப்படுகிறது.
இதற்காக உணவகத்தின் முகப்பில் விளம்பர பலகைகள், பந்தல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உணவக உரிமையாளர்
செந்தில் ஆறுமுகம் கூறுகையில்,
பாரம்பரிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை மக்கள் உண்ணவேண்டும். ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும் என்பதற்காக அரசு செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக உணவகத்துக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவுடன் கஞ்சி, பயிறு போன்றவற்றை இலவசமாக தருகிறோம். இந்த சேவையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு வழங்க முடிவுசெய்துள்ளோம். ஆகவே, வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை அன்றாட உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.