ETV Bharat / state

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தனியார் வணிக வளாகம் : பாஜக எதிர்ப்பு - BJP objection

தூத்துக்குடி : வட்டாட்சியர் அலுவலகத்தில் தனியார் வணிக வளாகம் அமைக்கப்படுவதை எதிர்த்து பாஜக சார்பாக வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

BJP Party Members Gave Petition to tahsildar against business complex

author img

By

Published : Oct 12, 2020, 3:53 PM IST

தூத்துக்குடி மாவட்டம், அண்ணாநகர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் தனியார் நிறுவனத்திற்கு வணிக வளாகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரை சந்தித்த பாஜகவினர், இன்று (அக்.12) புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ''தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் அமைந்துள்ள இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சித்தபோது, இங்கு உள்ள பொதுமக்களின் போராட்டத்தின் விளைவாக இந்த இடம் காப்பாற்றப்பட்டு தாசில்தார் வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எந்த நபர் இந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சி எடுத்தாரோ, அவருக்கே தாசில்தார் அலுவலகத்திற்குள் வணிக வளாகம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வட்டாட்சியரை அணுகி நாங்கள் விளக்கம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என அவர் பதில் அளிக்கிறார்.

தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஆகவே வணிக வளாகம் திறப்பதை ஏதோ அரசு விழா எடுப்பது போல ஏற்பாடு செய்துள்ளனர்.

தாசில்தார் அலுவலகத்தில் வணிக வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த பாஜகவினர்

இங்கு மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஆவின் பூத் அமைத்துக் கொள்ள மட்டுமே டெண்டர் விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மாற்றுத்திறனாளிக்கு ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே தனியாருக்கு வணிக வளாகம் ஏற்படுத்திக் கொடுக்க அனுமதி அளித்ததைக் கண்டித்து வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்குப் போட்டியிட டி. ராஜேந்தர் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.