ETV Bharat / state

அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா - வாரிசுதாரர்கள் தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு!

விடுதலை போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் வாரிசுகளுக்கு, அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தவில்லை என அவரது வாரிசுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா - வாரிசுதாரர்கள் தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 11, 2022, 6:02 PM IST

Updated : Jul 11, 2022, 6:10 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் மணிமண்டபம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளில் அரசு சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். இந்நிலையில் இன்று (ஜூலை 11) அழகு முத்துக்கோனின் 265 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா - வாரிசுதாரர்கள் தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு!

பின்னர் அவசரமாக அங்கிருந்து புறப்பட்டடுச் சென்றனர். அப்போது தங்களுக்கு உரிய மரியாதை செலுத்தவில்லை எனக் கூறி, அங்கு வந்திருந்த விடுதலை போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் வாரிசுதாரர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த அரசு ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வாரிசுதாரர் வனஜா யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வெளியூரில் இருந்து வந்து, கடந்த இரண்டு நாட்களாக இங்கே தங்கியிருந்து பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், எங்களை அவமரியாதை செய்துள்ளார்கள். மேலும் இந்த அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெறவில்லை; தேசிய கீதமும் இடம்பெறவில்லை” எனக் கூறினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ”உயிரைவிட மானம் பெரிது” - மாவீரன் அழகு முத்துக்கோன் குறித்து முதலமைச்சர் புகழாரம்!

Last Updated : Jul 11, 2022, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.