ETV Bharat / state

ஆர்ட் & கிராஃப்ட்-டில் அசத்தும் மாணவி மகாஷ் ஸ்ரீ! - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆர்ட் & கிராஃப்ட்டில் அழகழகான படங்களையும், உருவங்களையும் செய்து தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அசத்தி வருகிறார்.

ஆர்ட் & கிராஃப்ட்-டில் அசத்தும் சிறுமி
ஆர்ட் & கிராஃப்ட்-டில் அசத்தும் சிறுமி
author img

By

Published : Nov 5, 2021, 7:38 PM IST

Updated : Nov 6, 2021, 1:36 PM IST

தூத்துக்குடி: 'பெற்றோரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியரும்தான் ஒரு குழந்தையின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பதில் முக்கியமானவர்கள்' என்று அப்துல் கலாம் சொன்னதற்கு உதாரணமாய்த் திகழ்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி மகாஷ் ஸ்ரீ.

Awesome boy at Art & Craft  ஆர்ட் & கிராஃப்ட்-டில் அசத்தும் சிறுவன்  தூத்துக்குடி மாவட்ட செய்திகள்  Thoothukudi district news
ஆர்ட் & கிராஃப்ட்-டில் அசத்தும் சிறுமி

ஆர்ட் & கிராஃப்ட்டில் அழகழகான படங்களையும், உருவங்களையும் செய்து அசத்தி வருகிறார் இவர். அவரிடம் பேசிய போது...

ஆர்ட் & கிராஃப்ட்

உங்களைப் பற்றி சொல்லுங்க:

அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறேன். அப்பா பிரபாகரன், அம்மா வனஜா. சிறிய நடுத்தரக் குடும்பம் எங்களுடையது.

மாணவி மகாஷ் ஸ்ரீ

ஆர்ட் அண்ட் கிராஃப்ட்டில் எப்படி ஈடுபாடு வந்தது?

நான் படித்த ஆரம்பப்பள்ளியில் கேத்ரின் என்று ஒரு ஆசிரியை இருந்தார். அவர், எல்லாக் குழந்தைகளுக்கும் படங்களை வரையவும், சிறு சிறு கலைப்பொருட்களை செய்யவும் அழகாகக் கற்றுக் கொடுத்தார். அவரால்தான் எனக்கு இதில் ஈடுபாடு வந்தது. வீட்டிலும் வந்து காகிதங்களிலும், சுவற்றிலும் பென்சிலால் வரைந்து வண்ணம் தீட்டிப் பார்ப்பேன். எனது பெற்றோர் சுவர் வீணாவதாக நினைக்காமல் என்னை அதற்கு அனுமதித்து ஊக்குவித்தார்கள்.

அலங்கரிக்கும் பொருள்

இவ்வளவு கலைப் பொருட்களையும் செய்வதற்கு எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?

எங்கள் ஆசிரியை சொல்லிக்கொடுத்த உருவங்களைச் செய்து பார்த்த நான், அதுபோலவே வேறு வேறு உருவங்களைச் செய்தேன்.

பிறகு வளர வளர யூ-ட்யூப் பார்த்து மேலும் பல வகைகளில் செய்யக் கற்றுக்கொண்டேன். என் அப்பாவும் நான் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக்கொடுப்பார். அம்மாவும் நான் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கும்போது எனக்கு வீட்டு வேலைகள் எதுவும் தரமாட்டார். பெற்றோரின் ஊக்கமே என்னை இதில் மேம்படுத்திக்கொள்ள உதவியது.

கலை வண்ணம்

கலைப்பொருட்களைச் செய்வதற்கு என்னென்ன பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள்?

அட்டைப் பெட்டிகள், க்ளே, கம் (பசை), வண்ணம் தீட்டுவதற்கான பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் க்ளே, கம் ஆகியவற்றை மிக மிக குறைவான விலையில் நானே தயார் செய்துகொள்கிறேன்.

கண்ணன் வடிவம்

வீட்டிலேயே க்ளே தயாரிப்பது எப்படி?

சோள மாவுடன் சம அளவில் கம் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் ஏதாவது ஒரு எண்ணெய் சேர்க்க வேண்டும். ப்ரசர்வேட்டிவ்-ஆக வினிகர் அல்லது லெமன் ஜூஸ் அல்லது உப்புத் தண்ணீர் இவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து, பிறகு தேவையான வண்ணத்தைக் கலக்க வேண்டும்.

கைகளிலும் தரையிலும் எண்ணெய் தடவிக்கொண்டு நன்றாக அடித்துப் பிசைய வேண்டும். அது மென்மையாக ஆனவுடன் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.

அழகிய படைப்பாற்றல்

ஒரு சிலையைச் செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? அவற்றை என்ன செய்கிறீர்கள்?

முழு மூச்சாக செய்தால் ஒரு சிலையை அரை நாளிலேயே முடித்து விடலாம். காய்வதற்குத்தான் இரண்டு நாட்கள் ஆகும். நான் செய்யும் கலைப் பொருட்களே எங்கள் வீடு முழுவதையும் அலங்கரிக்கின்றன. எங்கள் வீட்டின் பூஜை அறையிலும் விதவிதமாக நான் செய்த சாமி சிலைகளே நிறைந்துள்ளன.

அட்டையில் சிலை

ஒரு சிலையை எப்படிச் செய்வது?

நாம் எந்த உருவத்தைச் செய்ய வேண்டும் என்று கற்பனை செய்கிறோமோ, அதை ஒரு காகிதத்தில் வரைந்து கொள்ள வேண்டும்.

காட்போர்டில் அதை டிரேஸ் எடுத்துப்பிறகு, அதை வெட்டி உங்களுக்கு எந்த வகை சிலை வேண்டுமோ அதற்கேற்ப காட்போர்டுகளை அடுக்கடுக்காக வைத்து செய்யலாம்.

அல்லது ஒரு காட்போர்டில் டிரேஸ் எடுக்கப்பட்ட படத்தின் மீது க்ளே வைத்து உருவத்தைச் செய்து காய்ந்தபின் வண்ணம் தீட்டலாம். நான் இதுவரை செய்தவைகளில் சாமி சிலைகளே அதிகம். அவற்றில் உடைகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட அலங்காரங்களை நுணுக்கமாக செய்ய வேண்டும். வண்ணம் தீட்டுவதும் அதுபோலவே முக்கியமானது.

அசத்தலான கைவண்ணம்

இதையும் படிங்க: அமெரிக்காவைக் கலக்கிய 'ஜெய் பீம்' இருளர்கள் - ஆச்சரியமளிக்கும் அதிசயம்

Last Updated : Nov 6, 2021, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.