ETV Bharat / state

கொடியேற்றத்துடன் துவங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா! - Tiruchendur Subramania Swami temple news

Avani Festival: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 1:09 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த ஆவணித் திருவிழாவில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1:30க்கு விஷ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை அடுத்து, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தர்களின் கோஷத்துடன் காலை 05:30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதையும் படிங்க: முன்னாள் எம்எல்ஏ, காற்றாலை பொறியாளர் மாறி மாறி தாக்குதல்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பழம், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற செப்டம்பர் 08 ஆம் தேதி, 5ம் திருநாளன்று குடவருவாயில் தீபாராதனை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10 ஆம் தேதி 7 ஆம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 11 ஆம் தேதி 8 ஆம் திருநாள் அன்று பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 10 ஆம் திருநாளான, வருகிற 13 ஆம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், பிற அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும், ஆவணித் திருவிழாவின் தேரோட்டம் நடைபெறக்கூடிய 10 ஆம் திருநாளான செப்டம்பர் 13 ஆம் தேதி 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருவிழா நாட்களில் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய திருவிழா நாட்களான செப்டம்பர் 7, 8, 9, 10 ஆகிய நான்கு நாட்களுக்கு நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் சிறப்பு மருத்துவக் குழு கோயிலில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.