ETV Bharat / state

போலி காசோலை செலுத்தியவர் கைது! - fraud with fake check

கோயம்புத்தூர்: வங்கியில் ரூ.6 கோடிக்கான போலி காசோலை செலுத்தி மோசடியில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போலி காசோலையை கொண்டு மோசடி செய்ய முயன்றவர் கைது

author img

By

Published : Jun 17, 2021, 3:37 AM IST

கோவை மீனாட்சி நகரைச் சோந்தவர் முருகானந்தம் (60). கடந்த மாதம் 26ஆம் தேதி கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் திருமங்கை சேரிட்டபிள் டிரஸ்டின் பெயரில் ரூ. 6 கோடி காசோலையை செலுத்திவிட்டு சென்றுள்ளார். காசோலையை சரிபாா்க்கும்போது போலியானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, வங்கி மேலாளா் சூரஜ், கோவை மாநகர குற்றப் பிரிவில் புகாா் அளித்துள்ளார். இதுதொடா்பாக, தனிப்படை அமைத்த கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த காசோலை டெல்லியைச் சேர்ந்த முகுல் ரோத்தகி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.

இந்தப் போலி காசோலை விவகாரத்தில் அகம் ஃபவுண்டேஷன், சாதிக், வடிவேலு, சிலா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக, மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சம்பவத்தில் ஈடுப்பட்வர்களை தனிப் படை அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று (ஜூன்.16) முருகானந்தம் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இத்தொடர்ந்து, தலைமறைவாக உள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனா்.

இதையும் படிங்க: பட்டாக்கத்தியுடன் காணொலி வெளியிட்ட இளைஞர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.