ETV Bharat / state

சிலப்பதிகாரம் பற்றி பெரியார் என்ன கூறினார் என கனிமொழி எம்பி படிக்க வேண்டும் - அண்ணாமலை காட்டம்!

author img

By

Published : Aug 12, 2023, 10:46 AM IST

பிரதமர் சிலப்பதிகாரத்தை படியுங்கள் என்கிறார் கனிமொழி, ஆனால் நான் கூறுகிறேன் சிலப்பதிகாரம் குறித்து பெரியார் என்ன கூறினார் என்பதை அறிய நீங்கள் முதலில் பெரியாரை படியுங்கள் என கோவில்பட்டி நடைபயணத்தின் போது அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி
thoothukudi

தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள்' என்ற பெயரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளுக்கும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11) மாலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் நடைபயணம் மேற்கொண்டார்.

இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் இருந்து தொடங்கிய நடைபயணமானது, அண்ணா பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, ”சாமானிய மனிதர்களுக்கான ஆட்சி மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. எட்டயபுரத்தில் பிறந்த முண்டாசு கவிஞன் பாரதிக்கு இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

முண்டாசு கவிஞனின் கனவு மிகப்பெரியது. மேக் இன் இந்தியா திட்டம் குறித்து 100 ஆண்டுகளுக்கு முன்பே சுயசார்பு பாரதம் பேசியவர். அவரது கனவை நிறைவேற்றியவர், பிரதமர் மோடி. இங்குள்ள ஆட்சியாளர்கள் பாரதியாருக்கு உரிய மரியாதையும், பெருமையும் கொடுப்பதில்லை. ஏனென்றால் பாரதி பேசிய தேசியம், ஆன்மீகம், பராசக்தி ஆகியவை இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு பிடிக்காது.

அதேபோல், கரிசல் காட்டு மண்ணில் பிறந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணனின் புகழை பாஜக போற்றுகிறது. 9 ஆண்டுகள் சிறையில் கழித்தவர், காமராஜர். ஆனால், தற்போது 2 நாள் சிறை சென்றுவிட்டு மிசா என்கின்றனர். கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வேண்டும் என இங்குள்ள மக்கள் கேட்டபோது, 2020ஆம் ஆண்டு அதற்கு புவிசார் குறியீடு வழங்கியவர், பிரதமர் நரேந்திர மோடி.

இதையும் படிங்க: தமிழகத்தின் முதல் யானைகள் பாதுகாப்பு தொடர்பான மாநாடு கோவையில் இன்று தொடக்கம்!

கோவில்பட்டியை ஹாக்கிபட்டி என பெயர் மாற்ற வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் மாநில, இந்திய அணிகளில் விளையாடுகின்றனர். சுதந்திர போராட்டம், கடலைமிட்டாய், ஹாக்கி என பெரும் சிறப்பு பெற்றது, கோவில்பட்டி. அதேபோல், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் இந்தியாவில் 80 சதவீத தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ளவர்களின் கோரிக்கையை ஏற்று, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய லைட்டர்களுக்கு பிரதமர் மோடி தடை விதித்துள்ளார்.

மோடியின் முகவரி கோபாலபுரத்தில் இல்லை. ஏழையின் குடிசையில் இருக்கிறது. யாரொல்லம் உழைத்து முன்னேறுகிறார்களோ, அங்கு மோடியின் முகவரி உள்ளது. யாரொல்லாம் இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அங்கு மோடியின் முகவரி உள்ளது. தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மோடி வழங்கி வருகிறார். 15 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெண்கள் பெயரில் அசையா சொத்துக்களாக உள்ளன.

இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த தொடக்கக் கல்வித்துறை, மின்வாரியம், உள்ளாட்சி துறையை தென்காசி மாவட்டத்தில் இருந்து கோவில்பட்டியுடன் சேர்க்க வேண்டும் என அங்குள்ள மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை நிச்சயமாக செய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துவோம். இல்லம்தோறும் குடிநீர் என்ற ஜல்ஜீவன் திட்டம் என்பது மோடியின் கனவு திட்டம். இதன் அடிப்படையில் தமிழகத்தில் 66 சதவீத வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த குழாயில் திமுக அரசால் குடிநீர் வழங்க முடியவில்லை. பிரதமர் மோடியின் திட்டத்துக்கு தாங்கள்தான் செய்தோம் என்று விளம்பரம் தேடிக் கொண்டுள்ளது திமுக அரசு.

குடிநீர் குறித்து கோவில்பட்டி நகர்மன்ற பாஜக உறுப்பினர் விஜயகுமார், கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் சென்று முறையிட்டார். அப்போது அமைச்சர் கீதாஜீவன், நகர்மன்ற உறுப்பினர் கவுன்சிலர் விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அழுகிய முட்டையைத்தான் கொடுப்பார். அவருக்கு சாமானிய மனிதனின் வலி எப்படி தெரியும்?

நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி, பிரதமர் சிலப்பதிகாரத்தை படியுங்கள் என்கிறார். நான் கூறுகிறேன் சிலப்பதிகாரம் குறித்து பெரியார் என்ன கூறினார் என்பதை அறிய, நீங்கள் முதலில் பெரியாரை படியுங்கள். உங்களுக்கு பிரதமரை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. இந்தியாவிலேயே பெண்களை பற்றி பேச வேண்டியவர்களில் கடைசியாக பேச தகுதி உள்ளவர்கள்தான் திமுக. நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசுவதற்கு முன், தனது சொந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். உங்களால் கொடுக்க முடியவில்லையென்றால் பிரதமர் மோடியை அழைத்து வந்து அணை கட்டி, குடிநீர் வழங்குவோம். நீங்கள் மாநில சுயாட்சி குறித்து பேசக்கூடாது.

இதையும் படிங்க: அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் கச்சத்தீவு மீட்பு குறித்து குரல் கொடுக்க தகுதியுள்ள ஒரே கட்சி பாஜகதான். செய்யக்கூடிய தவறுகளையெல்லாம் செய்துவிட்டு, நாடாளுமன்றத்தில் திமுகவினர் நடிக்க வேண்டாம். மகான்கள் வாழ்ந்த மண்ணில் திமுக ஆட்சி செய்வது கேவலம். குடிப்பதிலும், கடன் வாங்குவதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு.

காமராஜர் ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தற்போது பிரதமர் மோடி உயர்கல்விக்கு முக்கியத்துவம் தருகிறார். நான் நடைபயணம் மேற்கொண்டு சென்ற இடத்தில் எல்லாம் வேலை வாய்ப்பு, டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதுதான் கோரிக்கை மனுக்களாக வந்துள்ளன. டாஸ்மாக் மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. நேர்மையாக இருக்கும் காவல் துறையின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளது.

மதுவுக்கு அடிமையாகி அரசு நடத்தக் கூடிய மறுவாழ்வு முகாமில் சிகிச்சை பெற்று வந்தால் அரசு வேலை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். இது கஷ்டப்பட்டு படித்து தமிழக அரசு தேர்வாணைய தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களை திசை திருப்பிவிடும். இப்படிப்பட்ட அமைச்சர் எந்த பதவிக்கும் லாயக்கில்லாதவர்.

எங்களது யாத்திரையைப் பார்த்து பாவ யாத்திரை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நான் கூறுகிறேன், உங்கள் பாவத்தை கழுவக்கூடிய யாத்திரையைத்தான் பாஜக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது வரை 2 ஆயிரம் பேருக்கு கூட அரசு வேலை கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் 4 மாதங்களில் வெளியிடலாம். ஆனால், சுமார் 13 மாதங்களுக்குப் பின்னர் வெளியிடுகின்றனர். இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், 2023 டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்குவோம் என பிரதமர் மோடி கூறினார். தற்போது வரை 5.41 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்கள் உள்ளன. டிசம்பருக்குள் 10 லட்சம் பேருக்கு மேலேயே வேலை வழங்கப்படும்” என கூறினார்.

இந்த நடைபயணத்தை ஒட்டி கோவில்பட்டியில் எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி., 6 டி.எஸ்.பி. உட்பட சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தி சங்கம் சார்பில் பாஜக அண்ணாமலைக்கு கடலை மிட்டாய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘பாரதிய’ பெயர் மாற்றம்: இது மொழி சர்வாதிகாரத்தை காட்டுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.