தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மரியம்மாள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 500க்கும் மேற்ப்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி முறையான காலமுறை ஊதியம், முறையான ஓய்வு ஊதியம், பணிக்கொடையாக ஊழியருக்கு 10 லட்சமும், உதவியாளருக்கு 5 லட்சமும் வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கத்தினர் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக டி. விக்ரமன் நியமனம்