ETV Bharat / state

போக்சோவில் கைதான அதிமுக பிரமுகர் குண்டர் தடுப்புக் காவலுக்கு மாற்றம்!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் ஏசுராஜை குண்டர் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

re
ra
author img

By

Published : Oct 16, 2020, 7:15 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை துலுக்கர்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ஏசுராஜ் (48) அதிமுக கிளைக் கழகச் செயலாளராக உள்ளார்.

இவர் அப்பகுதி சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், அக்டோபர் 6ஆம் தேதி கழுகுமலை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஏசுராஜை கைதுசெய்தனர்.

இந்நிலையில், ஏசுராஜ் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஏசுராஜ் குண்டர் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.