ETV Bharat / state

"அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு... நாடாளுமன்ற தேர்தலுக்கு அல்ல.. சட்டமன்றத்திற்கும் சேர்த்து தான்" - கடம்பூர் ராஜூ!

லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை கண்டு அதிமுக அஞ்சப்போவதில்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடக்கும் பட்சத்தில் அதுகுறித்து அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

former-minister-kadampur-raju
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 10:46 AM IST

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி: கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் வீட்டில் தூத்துக்குடி அதிமுகவின் வடக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களை நம்பாமல் தொண்டர்களை நம்பாமல் ஒரு கம்பெனி மூலம் தேர்தலை சந்தித்த ஒரே கட்சி திமுக தான். 2 புள்ளி 5 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறி தற்போது 1 கோடி பேருக்கு தான் அத்தொகையை வழங்க உள்ளதாக திமுக அரசு சொல்கிறது.

நிராகரிக்கப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் பெண்களின் கோபத்திற்கு இனிமேல் தான் திமுக ஆளாகப் போகிறது. தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களிலேயே கர்நாடகாவில் மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஏன் வழங்கப்படவில்லை?. 30 மாதங்கள் கழித்து வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத்தொகையால், தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு 30 ஆயிரம் ரூபாய் கடன்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தி வரும் சோதனை எல்லாம் கண்டு அதிமுக அஞ்சப்போவதில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, திமுக ஆட்சியில் ரவுடிகள் சந்தோஷமாக உள்ளனர். டெல்லியில் அமித்ஷா எடப்பாடியார் சந்திப்பு நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தல் குறித்தும் முடிவு எடுக்க உள்ளனர்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். மைனர் மந்திரி சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசி சர்சையில் அவரே சிக்கி கொண்டு உள்ளார். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களே உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதயநிதி பேச்சால் வட மாநிலங்களில் தேர்தலின் போது பெரும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர். திமுகவிற்கு அவரது கூட்டணியில் உள்ள தலைவர்களே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட 3வது பெரிய கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. இப்போது தேர்தல் வந்தாலும் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொண்டு மிகப்பெரிய வெற்றியை அதிமுக அடையும்" என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இதையும் படிங்க: திண்டுக்கல் தனியார் பள்ளியில் மாணவன் திடீர் கோமா.. பெற்றோர் புகார்.. அதிகாரிகள் விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.