ETV Bharat / state

கடல் சீற்றம் காரணமாக கடலில் தவறி விழுந்த மீனவர் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்பு

தூத்துக்குடியில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

கடல் சீற்றம் காரணமாக தவறி விழுந்த மீனவர் பலி

author img

By

Published : Jan 27, 2023, 12:40 PM IST

தூத்துக்குடி மாவட்டம் இனிகோ நகரில் இருந்து கடந்த 25ஆம் தேதி மாலை பைபர் படகில் தூத்துக்குடி போல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன், குமார், லடிஸ் ஆகியோர் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் புதிய துறைமுகம் கடற்கரை பகுதி அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

மீன் பிடித்துவிட்டு இரவு கரை திரும்பும் போது முயல் தீவு பகுதி அருகே கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக படகிலிருந்த கிளைட்டன் தவறி கடலில் விழுந்துள்ளார். இதையடுத்து படகிலிருந்த சக மீனவர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கிளைட்டனை கண்டு பிடிக்க முடியாமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பின்னர் 2 நாட்களுக்கு பின் இன்று காலை முயல் தீவு கடற் பகுதி அருகே கரை ஒதுங்கிய நிலையில் கிளைட்டனின் உடல் மீட்கப்பட்டது. இந்த உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Palani Kumbabishekam: ராஜகோபுரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.