தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தை வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது, 9 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, பெருமாள்புரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) என்பவர் அச்சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். தொடர்ந்து சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவி உயிரிழப்பு