தமிழ்நாட்டில் நிகழும் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த செல்லத்துரை (வயது 19), மாதா கோயில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார்(24), கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த கனகராஜ்(29), ஸ்ரீவைகுண்டம் சுந்தர பாண்டிய புரத்தைச் சேர்ந்த முருகன்(43), ஆகிய நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அறிக்கை அளித்தனர்.
இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி குற்ற வழக்குகளில் தொடர்படைய நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!