ETV Bharat / state

அம்ரித் பாரத் திட்டம்; தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - ரயில்வே பொது மேலாளர் தகவல் - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

Amrit Bharat Station Scheme: மதுரை கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட உள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளர் சரத் ஸ்ரீவத்ஷா தெரிவித்துள்ளார்.

Amrit Bharat Station Scheme
தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 10:37 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளர் சரத் ஸ்ரீவத்ஷா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள், ரயில் நிலையத்தில் பசுமை பூங்கா அமைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்தி பார்க்கிங் வசதி செய்வது, பயணிகளுக்கான தங்கும் அறை, சுகாதார வசதிகள், தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு இன்னொரு நுழைவாயில் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மதுரை கோட்ட பொது மேலாளர் சரத் ஸ்ரீவத்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரயில் நிலையத்தை நவீனமயமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடைய வாய்ப்புள்ளது. மதுரை கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட உள்ளது.

பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, தூத்துக்குடி - பாலக்காடு இடையே விரைவில் பாலருவி லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்க மதுரை கோட்டம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து போன்று, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தீ விபத்துக்கள் ரயிலில் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

பயணிகள் ரயிலில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பட்டாசுகள், சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். எனவே, பயணிகள் எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை ரயில் பெட்டிகளில் கொண்டு செல்லக் கூடாது. மேலும், தூத்துக்குடி - அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த கட்டமாக நடைபெறும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை பக்கபலமாக செயல்பட வேண்டும் - அமைச்சர் மெய்யநாதன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.