ETV Bharat / state

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 15 வேட்பாளர்கள் போட்டி! - இடைத்தேர்தல்

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக உட்பட 15 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டி
author img

By

Published : May 3, 2019, 3:24 AM IST

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி 29 வரை நடைபெற்றது. இதில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு பரிசீலனையின்போது 23 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் 18 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடைசி நேரத்தில் 3 சுயேச்சைகள், தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டன.

தொடந்து, இந்த 15 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரின் தலைமையிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. அதன்படி அதிமுக வேட்பாளர் மோகன் இரட்டை இலை சின்னம், திமுக வேட்பாளர் சண்முகையா உதயசூரியன் சின்னம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா கரும்பு விவசாயி சின்னம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுந்தர்ராஜ் பரிசு பெட்டகம் சின்னம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தி டார்ச்லைட் சின்னம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் தவிர மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Intro:ஓட்டப்பிடாரம் தொகுதியில் இடைத் தேர்தலில் , அதிமுக, திமுக உள்பட 15 வேட்பாளர்கள் போட்டி

Body:தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி 29 வரை நடைபெற்றது. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் வேட்புமனு பரிசீலனை செய்யும்போது 23 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 18 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடைசி நேரத்தில் 3 சுயேச்சைகள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டு அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி தேர்தல் நடத்தும் அதிகாரி சுகுமாரின் தலைமையிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

அதன்படி அதிமுக வேட்பாளர் மோகன் இரட்டை இலை சின்னமும், திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையாவுக்கு உதயசூரியன் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா கரும்பு விவசாயி சின்னத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுந்தர்ராஜ் பரிசு பெட்டகம் சின்னமும், மக்கள் நீதி மையம் வேட்பாளர் காந்திக்கு டார்ச்லைட் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவர்கள் தவிர மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Conclusion:போட்டோ எப்.டி.பி.யில் உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.