தூத்துக்குடி: தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக அப்பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணிகிறிஸ்டோபர் , பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன் , மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி உட்பட மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் கைதான மீனவர்களால் அவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதியே மீனவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களை விடுவிக்கக் கோரி தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
-
On behalf of @BJP4TamilNadu, we request the kind intervention of our Hon EAM Thiru @DrSJaishankar avl in the early repatriation of the 12 arrested Tamil Fishermen by the Maldivian Coast Guard yesterday. pic.twitter.com/XoTSXHsrRU
— K.Annamalai (@annamalai_k) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On behalf of @BJP4TamilNadu, we request the kind intervention of our Hon EAM Thiru @DrSJaishankar avl in the early repatriation of the 12 arrested Tamil Fishermen by the Maldivian Coast Guard yesterday. pic.twitter.com/XoTSXHsrRU
— K.Annamalai (@annamalai_k) October 27, 2023On behalf of @BJP4TamilNadu, we request the kind intervention of our Hon EAM Thiru @DrSJaishankar avl in the early repatriation of the 12 arrested Tamil Fishermen by the Maldivian Coast Guard yesterday. pic.twitter.com/XoTSXHsrRU
— K.Annamalai (@annamalai_k) October 27, 2023
இதையும் படிங்க: “மண்டை மேல உள்ள கொண்டைய மறந்துட்டனே”.. போலீசாரைப் பார்த்ததும் வாகன ஓட்டி செய்த செயலால் சிரிப்பலை!