ETV Bharat / state

வீட்டில் சும்மா இருந்த பொருட்கள் மூலம் கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம்.. தூத்துக்குடி 10ம் வகுப்பு மாணவன் அசத்தல்! - Thoothukudi news

சாத்தான்குளத்தில் நாட்டுக்கோழி முட்டை குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான இன்குபேட்டரை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து 10ஆம் வகுப்பு மாணவன் தானே தயாரித்துள்ளார்.

நாட்டுக்கோழி குஞ்சு பொரிப்பதற்கான இன்குபேட்டர் - சாத்தான்குளம் மாணவன் அசத்தல்

author img

By

Published : May 30, 2023, 1:42 PM IST

சாத்தான்குளத்தில் நாட்டுக்கோழி முட்டை குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான இன்குபேட்டரை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து 10ஆம் வகுப்பு மாணவன் தானே தயாரித்துள்ளார்

தூத்துக்குடி: சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் நிவாஸ் (15). இவர் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் நாட்டுக்கோழி ஒன்று முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்துள்ளது. இதனிடையே, முட்டையிட்ட அந்த கோழியானது திடீரென காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து முட்டை மட்டும் தனியாக இருப்பதைக் கண்டு பள்ளி மாணவன் நிவாஸ் வேதனை அடைந்து அதனை குஞ்சு பொரிக்க வைப்பதற்காக சந்தையில் இன்குபேட்டரின் விலை என்ன என விசாரித்துள்ளார். அப்போது இன்குபேட்டர் விலை அதிகமாக இருந்துள்ளது.

இதனால், பள்ளி மாணவன் நிவாஸ் தனது வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு தானே ஒரு இன்குபேட்டரை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்து உள்ளார். பின்னர் இன்குபேட்டர் தயாரிப்பது எப்படி என இணைய தளத்தில் தேடி உள்ளார். குறிப்பாக, தனது வீட்டில் உள்ள ஸ்விட்சு போர்டு, தெர்மாகோல் அட்டை, பழைய பிஸ்கட் அட்டைப் பெட்டி மற்றும் ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களான தெர்மோஸ்டாட், பல்ப் வயர்கள் ஆகியவற்றை வைத்து இன்குபேட்டர் போல ஒரு செட்டப்பை தயார் செய்துள்ளார்.

பின்னர் இதில் பொருத்தப்பட்டுள்ள தெர்மா ஸ்டேட் மூலம் குறிப்பிட்ட வெப்பநிலையை தக்க வைத்துக் கொண்டு, அந்த முட்டையை அடைகாப்பது போல செயற்கையாக அடை காக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இந்த இயந்திரத்தின் மூலம் அடை காக்க வைக்கப்படும் முட்டையானது, காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் அதன் திசையை திருப்பி வைக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு முட்டையையும் காலை மற்றும் மாலை என குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பின்னர் முட்டையை மாற்றி மாற்றி வைத்துள்ளார். இந்த செயல் முறையில் வைத்து குஞ்சு பொரிக்கப்பட்ட கோழியானது மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறது என கூறுகிறார், பள்ளி மாணவன் நிவாஸ். அதேபோல், தனது முயற்சியால் கிடைத்த வெற்றியால் மாணவன் நிவாஸ், மிகுந்த உற்சாகத்துடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த செயல்முறையை வடிவமைக்க வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கடையில் இருந்து வாங்கிய ஒரு சில எலக்ட்ரானிக்கல் பொருட்கள் என ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானதாகவும் நிவாஸ் கூறுகிறார். இவ்வாறு நாட்டுக்கோழி முட்டையை அடை காக்க கோழி இல்லாததால் அந்த முட்டையில் இருந்து உயிரைக் கொண்டு வர, வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தானே ஒரு இன்குபேட்டரை தயாரித்து வடிவமைத்து அசத்திய பள்ளி மாணவன் நிவாஸை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அருணாச்சல பிரதேசத்தில் புதிய இன மரம் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.