ETV Bharat / state

காவல்நிலையத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு!

திருவாரூர்:மன்னார்குடி காவல்நிலையத்தில் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐம்பொன் சிலை
author img

By

Published : Jul 28, 2019, 9:40 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அறையில் சாக்கு பை ஒன்று இருந்துள்ளது. அதனை காவலர்கள் பிரித்து பார்த்த பொழுது சுமார் மூன்று அடி உயரத்தில் உலோகத்தால் ஆன பெருமாள் சிலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்த சாமி சிலையை கைப்பற்றி சிலை குறித்து விசாரணை செய்தனர்.பின்னர், வழக்கு பதிவேடு தகவல்களை ஆராய்ந்து பார்த்தபோது, பெருமாள் சிலை தொடர்பான எந்த தகவல்களும் இல்லை எனக் கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு!

இதையடுத்து, மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக், ஆய்வாளர் ராஜேந்திரனும் பெருமாள் சிலை குறித்து வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தியிடம் பெருமாள் சிலை ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலையின் மதிப்பு என்ன, தங்கத்திலான சிலையா, ஐம்பொன் சிலையா என ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் இருந்த சிலை எந்த கோயிலில் இருந்து திருடபட்டபோது பிடிபட்டது, வழக்கு பதிவேடு தகவல்கள் இல்லாமல் பெருமாள் சிலை எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Intro:Body:மன்னார்குடி காவல்நிலையத்தில் கணக்கில் வரப்பாடாத ஐம்பொன் பெருமாள் சிலை கண்டெடுப்பு.

திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் தாலூக்கா நகர காவல் நிலையத்தில் ஒரு பகுதியில் குற்றப்பிரிவு காவல் நிலையம் உள்ளது. காவலர்கள் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் உள்ள அறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றப்பிரிவு கிடங்கு அறையில் ஒரு சாக்கு பை கிடந்துள்ளது. அதனை போலீசார் பிரித்து பார்த்த போது பாசி படர்ந்த நிலையில் உலோகத்தால் ஆன சாமி சிலை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுக்குறித்து மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்த சாமி சிலையை கைப்பற்றி சிலை குறித்து விசாரனை செய்தனர்.
பின்னர் விசாரனையில் சாக்கு பையில் இருந்த சிலை அரை அடி உயரத்தில் பீடத்தில், சுமார் 3 அடி உயரத்திற்கு இருந்துள்ளது. மேலும் அந்த சிலை உலோகத்தால் ஆன பழமையான பெருமாள் சிலையாகும்.

இந்த பெருமாள் சிலைக் குறித்து காவல் நிலைய பதிவேடுகளில் விபரங்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வாளர் ராஜேந்திரன் ஆய்வு செய்த போது சிலை குறித்து எந்த விதமான தகவலும் குற்றப் பதிவேடுகளில் இல்லை என தெரிய வந்தது.
இதுக்குறித்து மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக் மற்றும் ஆய்வாளர் ராஜேந்திரனும் பெருமாள் சிலைக் குறித்து வழக்கு பதிவு செய்து சிலையை மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது . ஒப்படைக்கபட்ட சிலை தங்கத்திலானதா..? ஐம்பொன் சிலையா..? எனவும் சிலையின் மதிப்பு பல லட்சகணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது .

குற்றப்பிரிவு காவல் நிலைய கிடங்கு அறையில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று எந்த கோவிலில் இருந்து திருடபட்டபோது பிடிபட்டு சிலை என்று தொியாமல் சாக்கு பையில் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.