ETV Bharat / state

ஐந்தாண்டுகளாக தூர்வாரப்படாத நீர்நிலைகள்: ஒலிக்கும் வேதனைக் குரல்கள்! - வாய்க்கால்

திருவாரூர்: தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

watertank
author img

By

Published : Jun 5, 2019, 7:42 AM IST

காவிரி டெல்டா பகுதியில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த பாசனத்திற்கு தேவையான தண்ணீர் காவிரி ஆற்றிலிருந்து பிரதானமாக பெறப்படுகிறது.

காவிரி நீர் தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆறுகளில் திறக்கப்படும். தண்ணீர் கடைமடைப் பகுதிவரை எந்தவித தங்கு தடையின்றி சீராக செல்ல வேண்டும் என்றால் ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால், வடிகால்கள் என சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வசதியை அளித்துவருகிறது. பாசனத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பாக கோடை காலத்திலேயே இந்த நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டும்.

ஆனால் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெறவில்லை. மேலும் பெயரளவில் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் அளவிற்கு தூர்வாரப்பட்டுவருகிறது. இதனால் கடைமடைப் பகுதிவரை தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கூடி தமிழ்நாட்டிற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு சென்று சேர்வதற்கு ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் சரியாக தூர்வாரி தடுப்பணைகள் கட்டினால் மேட்டூர் அணை திறக்கப்படும்போது கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதன் மூலம் குடிநீர், விவசாயம், கால்நடைகளின் தேவையான நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறையாமல் பாதுகாக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தூர்வாரப்படாத நீர்நிலைகள்

Intro:திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது முழுமையாக ஆறுகள், குளங்கள் தூர் வாரினால் தான் விவசாயம் நடைபெறும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Body:திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது முழுமையாக ஆறுகள், குளங்கள் தூர் வாரினால் தான் விவசாயம் நடைபெறும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காவிரி டெல்டாவில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாசனத்திற்கு தேவையான தண்ணீர் காவிரி ஆற்றிலிருந்து பிரதானமாக பெறப்படுகிறது. காவிரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.

ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை எந்தவித தங்கு தடையின்றி சீராக செல்ல வேண்டும் என்றால் ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆறு,வாய்க்கால், வடிகால்கள் என சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வசதியை அளித்து வருகிறது. கோடை காலத்திலேயே பாசனத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பாகவே தூர்வாரப்பட வேண்டும் ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெறவில்லை. மேலும் பெயரளவில் 2 அல்லது 3 கிலோ மீட்டர் அளவிற்கு தூர்வாரப்பட்டு வருகிறது. இதனால் கடைமடை பகுதிவரை தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கூடி தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்று சேர்வதற்கு ஆறுகள் வாய்க்கால்கள் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் சரியாக தூர்வாரி தடுப்பணைகள் கட்டினால் மேட்டூர் அணை திறக்கப்படும் போது கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதன் மூலம் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளின் தேவையான நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறையாமல் பாதுகாக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.