ETV Bharat / state

முதலமைச்சர் பாராட்டு விழா: திருவாரூரில் மேடை அமைக்கும் பணிகள் ஆய்வு! - central minister felicitation ceremony

திருவாரூர்: முதலமைச்சருக்கான பாராட்டு விழா மேடை அமைக்கும் பணியினை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.

திருவாரூரில் மேடை அமைக்கும் பணிகள் ஆய்வு

author img

By

Published : Mar 4, 2020, 7:39 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்காக, சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகளின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

திருவாரூரில் மேடை நடைபெறும் அமைக்கும் பணிகள்

திருவாரூர் விவசாய சங்கம் சார்பில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி இவ்விழா நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த விழாவிற்கான மேடை அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, இந்த இடத்தினை மன்னார்குடி காவேரி ரங்கநாதன், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் கலந்தாலோசித்தனர்.

இதையும் படிங்க: ஜேஎன்யூ துணைவேந்தர் தேடுதல் குழுத் தலைவரா? - பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.