ETV Bharat / state

தமிழ்நாடு அரசு மதத்தின் பிடியில் இருக்கிறது -திருமாவளவன் சாடல்!

author img

By

Published : Nov 13, 2019, 12:15 PM IST

திருவாரூர்: தமிழ்நாடு அரசானது மதவாத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலு இல்லாமல், மதவாத பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு மதப்பிடியில் இருக்கிறது -திருமா சாடல்!

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்களான மறைந்த முருகேசன், தங்கையன், களந்தென்றல் ஆகியோரது படத்திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மறைந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு உதவி தொகையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது இதுவரை தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மதவெறி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு அரசு வலு இல்லாமல் இருக்கிறது. இச்சம்பவங்களால் அரசானது மதவாத சக்திகளின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது.

திருமா செய்தியாளர்ச் சந்திப்பு

தமிழ்நாட்டில் புதியதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த வித நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கவில்லை” என்றார்.

இதையும் படிங்க...போக்குவரத்து நெரிசல், காற்று மாசு குறித்து ஜி.கே. மணி பேச்சு!

Intro:

Body:தமிழக அரசானது மதவாத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலு இல்லாமல் மதவாத பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்களான மறைந்த முருகேசன், தங்கையன், களந்தென்றல் ஆகியோரது படத்திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மறைந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு உதவி தொகையை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,
தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது இதுவரை தமிழகரசு நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மதவெறி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு தமிழக அரசு வலுகுன்றி உள்ளது. இச்சம்பவங்களால் தமிழக அரசானது மதவாத சக்திகளின் பிடியில் சிக்கி விட்டதாக கவலை அளிப்பதாக கூறினார்.

மேலும் தமிழகத்தில் புதியதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் சென்னை மாநகராட்சியில் தலித்துகளுக்கான தனித்தொகுதியாக ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். அதோடு உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தமிழக அரசு எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை, தேர்தல் சம்பந்தமான தேதி அறிவிக்கும் வரையில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று நம்ப முடியவில்லை என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.