ETV Bharat / state

திருவாரூர் கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின் இருவர் கைது! - சென்னையைச் சேர்ந்த இருவர் கைது

திருவாரூர்: திருவாரூரில் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த இருவரை 13 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.

tiruvarur
tiruvarur
author img

By

Published : Jan 7, 2021, 10:51 PM IST

திருவாரூர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், குமரேசன் மற்றும் செந்தில் என்று அழைக்கப்படும் பல்லு செந்தில் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் திருவாரூர் மற்றும் பிற காவல் நிலையங்களில் உள்ளன. குறிப்பாக, செந்தில் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மணிகண்டன் மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் திருவாரூர் கமலாலய குளம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

முக்கிய சாலை என்பதால் கூட்டம் கூடவே ஆட்டோவில் வந்த நபர்கள் அதே ஆட்டோவில் தப்பித்து ஓடினர். ஆட்டோவில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் வண்டாம்பாளையம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த செந்தில் என்கிற பல்லு செந்திலையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர் . இதில் படுகாயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மணிகண்டன் மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், ஆட்டோவில் வந்த நான்கு பேரை மறித்து விசாரித்தபோது, அவர்கள் சென்னையைச் சேர்ந்த மதுசூதனன், ராஜு, முருகன், திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த நன்னிலம் காவல்துறையினர், தொடர்ந்து கைதானவர்களிடம் விசாரணை செய்தபோது, இந்த சம்பவத்தில் மேலும் பலர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மதுசூதனன் மூர்த்தி, நாகை பகுதியைச் சேர்ந்த ராஜு புறா செந்தில், திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், ஜெகதீசன், செந்தில்நாதன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஐந்து பேருக்கு தொடர்பில்லை என, காவல்துறையினர் விடுவித்தனர். பெயர் குறிப்பிடப்பட்ட மீதமுள்ள ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இந்த ஏழு பேரும் ஜாமீனில் வெளி வந்தனர். ஜாமீனில் வெளிவந்த ஏழு பேரும், கடந்த 2008ஆம் ஆண்டு தலைமறைவாகினர். நீதிமன்ற சம்மனை ஏற்காமல் தலைமறைவானதால் அவர்களை கைது செய்ய, கடந்த 2009ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த மதுசூதனன், மூர்த்தி ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்குச் சென்றது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இருவரும் வெளிநாட்டில் இருந்து திரும்பி சென்னையில் வசித்து வந்ததாகவும், மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதற்காக விமான நிலையம் செல்லவுள்ளதாக, காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதுதொடர்பான தகவல்களை விமான நிலைய அலுவலர்களுக்கு ஏற்கனவே தகவல் அளித்திருந்தனர். வெளிநாடு செல்லவிருந்த மதுசூதனன், மூர்த்தி ஆகிய இருவரும் கையும் களவுமாகப் பிடிபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உத்தரவின்பேரில் நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான தனிப்படையினர் இருவரையும் நன்னிலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இக்கொலையில் தொடர்புடையவர்களில் சிலர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதால், அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என, காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.